Nerkonda Paarvai Review Twitter Review – அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் பற்றி அப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
போனி கபூரின் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வருகிற 8ம் தேதி வெளியாகிறது. ஆனால், சிங்கப்பூரில் இன்றே வெளியாகிவிட்டது. மேலும், திரைத்துறையை சேர்ந்த சிலர் மற்றும் விமர்சகர்களுக்கு சென்னையில் சிறப்பு காட்சியும் திரையிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்படத்தை பார்த்த சிலர் டிவிட்டரில் படம் பற்றிய கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
அஜித்தின் நடிப்பு மாஸாக இருப்பதாகவும், நீதிமன்றத்தில் அவர் பேசும் வசனங்கள் அனல் தெறிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி வருகின்றனர். அதோடு, இப்படம் பாலிவுட் படமான ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக் என்றாலும் தமிழுக்கு ஏற்றவாறு சில மசாலாக்களை தூவி படத்தின் இயக்குனர் வினோத் அஜித் ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளார் எனவும் பதிவிட்டு வருகின்றனர். அதோடு, நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையையும் பாராட்டி வருகின்றனர்.
இப்படத்தின் அஜித்தின் பெயர் பாரத் சுப்பிரமணியம். அதாவது, நிமிர்ந்த நன்னடை வேண்டும் என பெண்கள் புரட்சி பற்றி பாடிய பாரதியின் நினைவாக இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் முழு பெயர் சுப்பிரமணிய பாரதி என்பது குறிப்பிடத்தக்கது.
The post வேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம் appeared first on – Cinereporters Tamil.
Source: விமர்சனம்
Be First to Comment