Press "Enter" to skip to content

விடுதலை ஆன மது ஒழிப்புப் போராளி நந்தினிக்கு திருமணம் – சமூகவலைதளங்களில் பரவும் வீடியோ !

மது ஒழிப்புப் போராளி நந்தினிக்கு இன்று மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்துள்ளது.

தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த கோரி தனது தந்தையின் துணையுடன் தொடர்ந்து போராடி வருபவர் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி. மதுவிலக்கு போராட்டம் காரணமாக பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடிய வழக்கு ஒன்றிற்கான விசாரணையின் போது ‘மது உணவுப்பொருளா ?’ என நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்காக நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் கைது செய்யப்பட்டார்.

நந்தினிக்கு இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டது பல தரப்பிலும் இருந்து கண்டனங்களை எழுப்பியது. இதனையடுத்து அவர் சில தினங்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டார். அதையடுத்து நிச்சயிக்கப்பட்ட தேதியில் அவருக்கும் அவரது காதலருக்கும் இப்போது திருமணம் நடந்துள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *