இந்த மாதிரி தெரு பொறுக்கி நாய்களை… அதுல்யா ரவி ஆவேசம் (வீடியோ)

டிரைலர்

Athulya on pollachi rape case

பொள்ளாச்சி பலத்காரத்தில் தொடர்புடைய தெரு பொறுக்கி நாய்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என நடிகை அதுல்யா ரவி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் பெண்களை காதல் போர்வையில் மயக்கி, பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என திரையுலகினர் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் அதுல்யா ரவி வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது:

இந்த மாதிரி தெரு பொறுக்கி நாய்களால மற்ற நல்ல பசங்களையே நம்ம இப்ப ஜாக்கிரதையாக பார்க்க வேண்டியதா இருக்குங்க.

மற்ற நாட்டிலே இந்த மாதிரி தப்பு நடந்தால், என்ன மாதிரி தீவிரமான தண்டனை கொடுப்பாங்களோ, அதை இவணுங்களுக்கு கொடுத்தாதான், அடுத்து இந்த மாதிரி பன்றவங்களும் பயப்படுவாங்க. இல்ல அந்த மாதிரி நியூசும் வரல அப்படீன்னா, இன்னும் இந்த சைக்கோக்கள் எல்லாம் இந்த மாதிரி நிறைய விஷயங்கள பண்ணிக்கிட்டே தான் இருப்பாங்க. இதுலவேற எம்எல்ஏவோட பையன் அப்படீன்ணு சொல்லிக்கிட்டு இருக்காங்க. தயவு செஞ்சு, உங்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த மாதிரி உணர்வுபூர்வமான விஷயத்தை அரசியல் ஆக்காதீங்க. உங்க எல்லாருகிட்டயும் வேண்டுகோள், தயவு செஞ்சு எந்த பெரிய தணடனையும் கொடுக்காம இவணுங்கள விட்டுறாதீங்க. என கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *