சேப்பாக்கம் ஸ்டேடியத்து பக்கம் கால வைக்க.. குறைஞ்சது ரூ.1300 வேணும் #ipl

டிரைலர்

சென்னை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்க்க குறைந்த டிக்கெட் ரூ.1300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை சென்னையில் நாளை மறுநாள் தொடங்குகிறது.

பனிரெண்டாவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 23 ஆம் தேதி தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னையில் நடைபெறும் தொடக்க ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுண்டரில் நாளை மறுநாள் அதாவது சனிக்கிழமை காலை 11 : 30 மணிக்கு தொடங்குகிறது.

www.chennaisuperkings.com மற்றும் in.bookmyshow.com தளத்திலும் டிக்கெட் விற்பனை ஆரம்பம் ஆகும். சென்னை போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூபாய் 1300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச விலையிலான டிக்கெட்டுகள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுண்டரில் மட்டுமே விற்கப்படும்.

ரூபாய் 2500, ரூபாய் 5 ஆயிரம், ரூபாய் 1500 ஆகியவைகளிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் மோதும் எஞ்சிய போட்டிக்கான டிக்கெட் விற்பனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *