Press "Enter" to skip to content

கண்ட இடத்தில் கை வைத்த வாலிபர் ; பளார் விட்ட குஷ்பு : வைரைல் வீடியோ

Kushboo slapping a man – தன் உடலில் ஏடாகூடமாக வைத்த வாலிபரின் கன்னத்தில் நடிகையும், தேசிய காங்கிரஸ் செயலாருமான குஷ்பு பளார் என அறை விட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமன குஷ்பு காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரம் தொடர்பாக அவர் சமீபத்தில் பெங்களூர் சென்றிருந்தார். அப்போது அவரை அருகில் பார்க்க கும்பல் கூடியது.

அப்போது, அவரின் பின்னால் இருந்து ஒருவர் அவரின் உடலின் மீது கை வைத்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த குஷ்பு திரும்பி அந்த வாலிபரின் கன்னத்தில் பளார் பளார் என 2 அறை விட்டார். இதில் நிலை குலைந்த அந்த வாலிபர் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பத்திரிக்கையாளர் “குஷ்புவிடமிருந்து பெண் பத்திரிக்கையாளர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *