Press "Enter" to skip to content

படம்தான் வரல.. அயோக்யா ஸ்னீக் பீக் வீடியோ பாருங்க…

Ayogya Sneak peak video – விஷால் நடிப்பில் உருவாகியுள்ள அயோக்யா படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்காக அயோக்யா படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஷால், ராசி கண்னா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 10ம் தேதியான இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை. இது விஷால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியை ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. எம்.எஸ் பாஸ்கரை மிரட்டும் தொனியிலும், பயமுறுத்தும் வகையிலும் விஷால் பேசும் காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளது.

More from டிரைலர்More posts in டிரைலர் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *