Press "Enter" to skip to content

விஜய்சேதுபதியின் புதிய பட உரிமையை பல கோடி கொடுத்து கைப்பற்றிய ஜீ தமிழ்

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் மாமனிதன். இப்படத்துக்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.

இந்த படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் இறுதிகட்டப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஜி தமிழ் தொலைக்காட்சி மாமனிதன் படத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது.

மாமனிதன் படத்தை எடுத்த சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் உதயநிதி , தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *