பிக் பாஸி… கமலுக்கு பதில் களத்தில்!

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் இருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு பதிலாக என்றும் இளமை நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்று தொகுத்து வழங்கி இருக்கிறார்.

ஏற்கெனவே ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். அந்த அனுபவத்தில் தற்போது தெலுங்கு டூ தமிழ் என ரூட் மாறி வந்திருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவர் தொகுத்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலுக்குப் பதில் தொகுப்பாளராக நியமிக்க, ரம்யா கிருஷ்ணன், சூர்யா, விஜய் சேதுபதி, மாதவன், ஸ்ருதிஹாசன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.

இறுதியாக ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று வெளியான புரமோவில் வீடியோ மூலம் போட்டியாளர்களிடம் பேசிய கமல், எனக்கு உதவியாக எனது தோழி ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறி அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

17 + 7 =