ஒரு ஸ்மைல்... அழகாய் புடைவை கட்டி... கலக்கும் வாணி போஜன்!

இப்போது வலைத்தளங்களில் தன் புகைப்படங்களை உலவ விட்டு, ரசிகர்கள் தன்னை மறக்காத வகையில் எப்போதும் ‘டச்’சில்  வைத்துக் கொண்டிருக்கிறார்.
 
இப்போது வலைத்தளங்களில் தன் புகைப்படங்களை உலவ விட்டு, ரசிகர்கள் தன்னை மறக்காத வகையில் எப்போதும் ‘டச்’சில்  வைத்துக் கொண்டிருக்கிறார்.

வாணி போஜன், இப்போது வலைத்தளங்களில் தன் புகைப்படங்களை உலவ விட்டு, ரசிகர்கள் தன்னை மறக்காத வகையில் எப்போதும் ‘டச்’சில்  வைத்துக் கொண்டிருக்கிறார். வாணி போஜன் என்பதை விட சத்யா என்ற பெயரில் ரசிகர்களை சுண்டியிழுத்தவர். 

சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிய தொடர் தெய்வமகள். இதில் சத்யாவாக நடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இல்லத்தரசிகளின் உள்ளம்கவர் கள்ளியாக உலா வந்தார். சின்னத்திரையில் தனக்கென ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இப்போது  வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார். 

அஷ்வத் மாரிமுத்து என்ற புதுமுக இயக்குனர் இயக்கிய ‘ஓ மை கடவுளே’ படத்தில் நடித்துள்ளார்.  இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதில் வாணி போஜன் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் எடுபட்டது.  மீரா அக்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவரை பலரும் செல்லமாக மீரா அக்கா என்றே அழைக்கும் அளவுக்கு மனதில் பதிந்து விட்டார். தற்போது கைவசம் 5 படங்கள் வைத்துள்ளாராம்.

இணையத் தொடர்களிலும் நடிக்க முன்வந்துள்ளார் வாணி போஜன்.  மற்ற நடிகைகளைப் போல், சமூக வலைத்தளப் பக்கத்தில் அவ்வப்போது அழகான புகைப்படங்களை உலவ விட்டு கலக்கி வருகிறார். அண்மையில் இவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில்  வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் பகிரப் பட்டு வருகிறது!

From around the web