நவபாஷாண சிலையை பற்றிய கதையுடன் வருகிறது அரோகரா! பக்திப் படம்! 

நவபாஷாண சிலையைப் பற்றியும் அதன் மகிமைகளைப் பற்றியும்
 
புதுமுகங்கள் பலருடன் முன்னணி நட்சத்திரங்களும் இத்திரைப்படத்தில் பங்கேற்று நடிக்க இருக்கிறார்கள்.

1980களில் வெளியாகும் பெரும்பாலான படங்களில் பக்திபடங்கள் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த சில வருடங்களாகவே பக்தி படங்களின் எண்ணிக்கை பெருவாரியாக குறைந்து வருகிறது. விரைவில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியாகும் பக்தி படமாக அமைய இருக்கிறது.

இந்த நிலையில் அரோகரா என்ற பெயரில் ஒரு பக்தி படத்திற்கு பூஜை போடப்பட்டிருக்கிறது. இது முருகக் கடவுளைப் பற்றிய பக்தி படம். ஒரு லட்சம் முருக பக்தர்கள் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறார்கள். தொட்ரா திரைப்படத்தை இயக்கிய மதுராஜ் இப்படத்தை இயக்குகிறார். புதுமுகங்கள் பலருடன் முன்னணி நட்சத்திரங்களும் இத்திரைப்படத்தில் பங்கேற்று நடிக்க இருக்கிறார்கள்.


 
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. விரைவில் படப்பிடிப்பிற்கான அனுமதி அளிக்கப்பட்ட பிறகு படப்பிடிப்பு வேலைகள் தொடங்கப்படும். அரோகரா திரைப்படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, "1980, 2000, 2020 என மூன்று காலகட்டங்களில் திரைப்படம் நடப்பதுபோல் பக்தியோடு திகிலும் கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறதாம்.

முருகப்பெருமானின் நவபாஷாண சிலையைப் பற்றியும் அதன் மகிமைகளைப் பற்றியும் அதன் பின்னணியில் இருக்கும் மர்மங்களைப் பற்றியும் இந்த திரைப்படம் பேசும்" என்றார். ஊரடங்கு முடிந்து திரைப்படங்களுக்கான அனுமதி கொடுக்கப் பட்ட பிறகு அறுபடை வீடுகளில் அரோகரா திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

From around the web