‘இந்தி தெரியாது போடா’வால்... அட்டர் ஃப்ளாப் ஆன பாரதிராஜாவின் ‘ஹிட்’!

பாரதிராஜாவுக்கு ஏன் இந்த தோல்வி என புரியவில்லை. ரொம்ப வருடம் கழித்து தான் பாரதிராஜாவுக்கு தெரிந்தது
 
பாரதிராஜாவுக்கு ஏன் இந்த தோல்வி என புரியவில்லை. ரொம்ப வருடம் கழித்து தான் பாரதிராஜாவுக்கு தெரிந்தது

ஹிந்தி தெரியாது போடா...

பாரதிராஜா தமிழ் திரையுலக இயக்குனர். 16 வயதினிலே என்கிற ஒரேப்படத்தில் புகழின் உச்சிக்கே சென்றார்.

காரணம் அவரது 16 வயதினிலே படம் தான். படம் தெலுங்கில் கூட வெளிவந்தது. 2000க்கு பிறகு 'கருமாடிக்குட்டன்' என்கிற பெயரில் மல்லு சேட்டன் வினயன் காப்பி பேஸ்ட் செய்திருந்தனர். கமல் வேடத்தில் கலாபவன் மணியும், ஸ்ரீதேவி வேடத்தில் கௌசல்யாவும் நடிக்க வெற்றி பெற்றது.

தனது 16 வயதினிலேயை ஹிந்தியில் எடுத்தார் பாரதிராஜா. அமோல் பலேகர் நடிக்க, ஸ்ரீதேவியை Introducing sweet sixteen sridevi என்றெல்லாம் டைட்டில் கொடுத்து அறிமுகப்படுத்தினார். ஹிந்தி வசனங்களை டாக்டர் சங்கர் ஷேஷ் என்பவர் எழுதினார். வெற்றிக்குரிய எல்லா அம்சங்களும் இருந்தும் அப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

பாரதிராஜாவுக்கு ஏன் இந்த தோல்வி என புரியவில்லை. ரொம்ப வருடம் கழித்து தான் பாரதிராஜாவுக்கு தெரிந்தது. அவர் படத்தில் பேசிய வசனங்கள் ஹிந்தி அல்ல. போஜ்புரி.

போஜ்புரி பீகார் மற்றும் நேபாள் பார்டர்களில் மட்டும் பேசும் மொழி. மொத்தத்தில் பாரதிராஜா ஸ்ரீதேவியை அறிமுகப்படுத்தியது ஹிந்தியில் அல்ல. போஜ்புரியில். அவர் எடுத்ததும் போஜ்புரி படமாகி போனது.

வசனகர்த்தாவால் தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என தெரியவே பாரதிராஜாவுக்கு பல வருடங்கள் ஆனது...

இது தான் ஹிந்தி தெரியாது போடா..

- செல்வன் அன்பு

From around the web