என்றும் புதிதாய் மிளிரும் ‘தல’ யின் விஸ்வாசம்! அளவிலா மகிழ்ச்சியில் அருண்பாரதி! 

ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
 
அஜித் படங்களிலேயே மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.

விஸ்வாசம் சென்ற ஆண்டு வெளியானதா? இல்லை இந்த ஆண்டுதான் வெளியானதா? என குழப்பமே வந்து விட்டது என்று பாடலாசிரியர் அருண் பாரதி பதிவிட்டுள்ளார்.

அஜித் - சிவா கூட்டணியில் 2019 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியான படம் விஸ்வாசம். இந்தப் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக வெளியாகி அஜித் படங்களிலேயே மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. இந்தப் படம் ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

திரையரங்களில் மட்டுமல்ல ஒவ்வொரு முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போதும் விஸ்வாசம் படம் சாதனைகளை படைத்து வருகிறது. நேற்றும் விஸ்வாசம் படம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. இதையடுத்து ரசிகர்கள் #Viswasam என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் டிரெண்ட் செய்தனர்.
இதையடுத்து பாடலாசிரியர் அருண் பாரதி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், "விஸ்வாசம் சென்ற ஆண்டு வெளியானதா? இல்லை இந்த ஆண்டுதான் வெளியானதா? என குழப்பமே வந்து விட்டது. ஒவ்வொரு முறை தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் போதும் நேற்றுதான் படம் வெளியானது போல் ரசிகர்கள் கொண்டாடுவதும், தொலைபேசியில் அழைத்து பாராட்டுவதும் மிகுந்த உற்சாகம் தருகிறது. அன்பு நன்றிகள்" என்று பதிவிட்டுள்ளார்.


பாடலாசிரியர் அருண் பாரதி, விஸ்வாசம் படத்தில் உள்ள "டங்கா டங்கா" என்ற பாடலை எழுதியவர். இந்தப் பாடலை செந்தில் - ராஜலட்சுமி ஆகியோர் இணைந்து பாடினர்.

From around the web