தந்தையும் மகனும் இணைந்து ஒரு முருங்கை சப்ஜெக்ட்! வெளியான ஃப்ர்ஸ்ட் லூக்!

இயக்குநர் நடிகர் பாக்யராஜை மிகவும் பிரபலப்படுத்திய முருங்கை
 
நீண்ட நாட்களாகவே ஒரு வெற்றிக்காக காத்திருக்கும் சாந்தனு

ரவீந்திரன் சந்திரசேகர் தயாரிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு முருங்கைகாய் சிப்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஸ்ரீஜர் இப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தில் பாக்கியராஜ், அவருடைய மகன் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி, யோகி பாபு , மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி இருக்கிறது.

 
திரைத்துறையில் நீண்ட நாட்களாகவே ஒரு வெற்றிக்காக காத்திருக்கும் சாந்தனுவிற்கு இந்த முறை தந்தையுடன் இணையும் இப்படம் இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இயக்குநர் நடிகர் பாக்யராஜை மிகவும் பிரபலப்படுத்திய முருங்கைக்காயை பிரதானமாகக் கொண்டு இந்த திரைப்படத்திற்கு முருங்கைகாய் சிப்ஸ் என்ற தலைப்புடன் இப்படம் உருவாக இருக்கிறது.

பல்வேறு கலாட்டா கல்யாண திரைப்படங்களைப் பார்த்திருந்த நமக்கு, ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்தப் படம், புதுமணத் தம்பதிகளின் முதல் இரவில் நடைபெறும் முக்கிய பாரம்பரிய நிகழ்வுகளையும், சாங்கித்யங்களையும் நகைச்சுவை மாறாமல், சற்றும் விரசம் இல்லாமல் சுவராஸ்யமாக காட்சிப்படுத்த இருக்கிறது

.

ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்க கூடிய சூழ்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு படப்பிடிப்பிற்கான அனுமதி வழங்கப்பட்ட உடன் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார்  

From around the web