விஜய் சேதுபதி கிட்ட பேசிட்டேன்... ஆனாலும் மிரட்டுறாங்க.. யாரு என்னன்னே தெரியல..! : சீனுராமசாமி அலறல்!

விஜய் சேதுபதியிடம் பேசிவிட்டேன், ஆனாலும் எனக்கு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது, யார் என்ன என்று தெரியவில்லை, சினிமாவில் உள்ள அரசியலும் எனக்குத் தெரியவில்லை என்று  ‘அப்பாவி’ போல் அலறியுள்ளார்  இயக்குனர் சீனுராமசாமி!

இயக்குநர் சீனு ராமசாமி அவரது டிவிட்டர் பதிவில் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும்  அவசரம்... என முதல்வரிடம் கோரிக்கை பதிவிட்டார். 

இதைத் தொடர்ந்து இயக்குநர் சீனுராமசாமி செய்தியாளர்களைச் சந்தித்து, தன் நிலை குறித்து விளக்கினார். அப்போது, “முத்தையா முரளிதரன் குறித்த படத்தில் நடிக்க வேண்டாம் என விஜய் சேதுபதியிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் தமிழ் இன மக்களுக்கு எதிராக மாறவேண்டாம் என்றும் அவர் நலன் கருதியே நான் கோரிக்கை வைத்தேன். 

ஆனால் நான் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதாக கூறி செய்திகள் சித்திரிக்கப் படுகின்றன. எனக்கு அரசியல் சினிமா எடுக்கத் தெரியும். ஆனால், சினிமாவில் உள்ள அரசியல் தெரியாது. 

எனக்கு கடந்த 4 நாட்களாக வாட்ஸ் அப் மூலமும், போனிலும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்துகொண்டு இருக்கின்றன. சமூக வலைதளங்களில் ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டுகின்றனர். 

தொடர்ந்து அச்சுறுத்தல் வந்துகொண்டிருப்பது எனக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் சேதுபதி டிவிட்டர் பதிவில், ‘நன்றி, வணக்கம்’ என கூறியதன் அர்த்தம் என்ன என அவரிடம் கேட்டேன். அத்துடன் அவரை நேரில் சந்தித்தும் பேசினேன். ஆனாலும் எனக்கு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இதை யார் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கவுள்ளேன்” என்று தெரிவித்தார்.

From around the web