ஜோதிகா இடத்தில் நான் இல்லை! சிம்ரன் பதில்!

எனது ரசிகர்களின் ஏமாற்றத்திற்கு வருந்துகிறேன்
 
ந்திரமுகி 2 படத்தில் சிம்ரன் நடித்தால் நன்றாக இருக்கும்

சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகா கதாப்பாத்திரத்தில் சிம்ரன் நடிக்க உள்ளார் என்று வெளியான தகவல் குறித்து நடிகை சிம்ரன் விளக்கமளித்துள்ளார்.


பி. வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியான சந்திரமுகி படம், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் கதையை எழுதி முடித்துவிட்டதாக பி. வாசு அண்மையில் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளது. எனினும் படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதனிடையே சந்திரமுகியின் 2-ம் பாகத்திலும் நடிகை ஜோதிகா நடிக்க உள்ளதாக முதலில் தகவல்கள் வெளியானது. ஆனால் இதில் நடிப்பது குறித்து யாரும் தன்னை அணுகவில்லை என்று ஜோதிகா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீங்கள் நடிக்கவில்லை என்றால் வேறு யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்கிற கேள்விக்கு ஜோதிகா அளித்த பதில்: சந்திரமுகி 2 படத்தில் சிம்ரன் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார்.சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகா கதாப்பாத்திரத்தில் நடிகை சிம்ரன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவலை சிம்ரன் மறுத்துள்ளார்.

இந்த வதந்தி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்ரன் விளக்களித்துள்ளார். அவரின் பதிவில் " இது போலி செய்தி. எனது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு வருந்துகிறேன். மேலும் இதுகுறித்து நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். அந்தப் படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. அனைவரும் தயவுசெய்து சரியான தகவல்களை பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சந்திரமுகி படத்தில் ஜோதிகா கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் சிம்ரனிடமே அணுகப்பட்டது. ஆனால் ஒரு சிலக் காரணங்களால் சிம்ரனால் அப்படத்தில் நடிக்க முடியவில்லை. அதன்பிறகே ஜோதிகா அந்த கதாப்பாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 

From around the web