திருமணத்திற்கு பின் புனித பசுவாய் மாறியிருக்கும் ஜோதிகா: மீராமிதுன்!

என் காட்சிகளை நான் ஒரே டேக்கில் நடித்து முடித்தேன்.
 
சூர்யாவோ ஒவ்வொரு காட்சிக்கும் 10 முதல் 15 டேக் வரை எடுத்தார். அவருக்கு நடிப்புன்னா என்னன்னே தெரியாது.

மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்

சமீப நாட்களாக மீரா மிதுன் திரிஷா , நயன்தாரா , கமல் , விஜய் , ரஜினி என பெரிய நடிகர்களை நடிகைகளை குறித்து அவதூறு பேசி சர்ச்சையாக பதிவிட்டு வருகிறார். அண்மையில் சூர்யாவிற்கு நடிப்புன்னா என்னன்னே தெரியாது. நான் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்த போது என் காட்சிகளை நான் ஒரே டேக்கில் நடித்து முடித்தேன். ஆனால் சூர்யாவோ ஒவ்வொரு காட்சிக்கும் 10 முதல் 15 டேக் வரை எடுத்தார். அவருக்கு நடிப்புன்னா என்னன்னே தெரியாது.' எனக் கூறினார் 

இந்நிலையில் தற்ப்போது மீண்டும் சூர்யா மனைவி ஜோதிகா குறித்து ஒரு சர்ச்சை ட்விட் போட்டுள்ளார்.
அதில், ஜோதிகாவின் கருப்பு பக்கம் பற்றி அனைவருக்கும் தெரியும். சூர்யாவை திருமணம் செய்துக்கொண்ட பின்னர் தான் அவர் ஏதோ புனித பசு போல மாறி விட்டார். அதற்கு முன் அவர் எப்பேற்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறி சர்ச்சையான ட்விட் போட்டுள்ளார் மீரா மிதுன்.

From around the web