என் முன்னாள் மனைவி சுசித்ரா...  நெட்டிசன் கேள்விக்கு நடிகர் கார்த்திக் பதில்...

 

suchitra

தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் ரெடியோ தொகுப்பாளினியும், பாடகியுமான சுசித்ரா சென்றுள்ளார்.  அவரின் நடவடிக்கைகள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில், சுசித்ராவின் நடவடிக்கை பற்றி அவரின் முன்னாள் கணவர் மற்றும் நடிகர் கார்த்தியிடம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்த்தி ‘என் முன்னாள் மனைவி சுசித்ராவை நான் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன். அவரை மிகவும் பிடிக்கும். உங்களுக்கு அவரை பற்றி சரியாக தெரியாது’ என பதிலளித்துள்ளார். 

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை எனவும், நிஜ வாழ்க்கையிலேயே தேவையில்லாத பல விஷயத்தை நாம் செய்கிறோம். இதில் பிக்பாஸ் வேறா? என அவர் பதிலளித்தார்.

From around the web