அடுத்த பாகுபலி..! ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்!

பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம்,
 
பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம்,

பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லூரி சீதாராம ராஜூ, கொமாரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படுகிறது. 

சீதாராம ராஜூவாக ராம் சரணும், கொமாரம் பீமாக ஜூனியர் என்.டி.ஆரும் நடிக்கின்றனர்.  ஏற்கெனவே, ராமராஜூவாக ராம் சரண் தோன்றும் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய படக்குழு, தற்போது கொமாரம் பீம் ஆக வரும் ஜூனியர் என்.டி.ஆரின் டீசரை வெளியிட்டுள்ளனர். எல்லோரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து ரசிகர்களை ஆச்சர்யப்பட வைக்கும் வகையிலேயே அந்தத் தோற்றம் உள்ளது.

இன்று காலை வெளியிடப்பட்ட ஜூனியர் என்.டி.ஆரின் 'பீம்' லுக் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருள் ஆகியுள்ளது. இதுவரை அவரை இத்தகைய தோற்றத்தில் பார்த்திருக்கவில்லை என ரசிகர்கள் சிலாகிக்கின்றனர். 

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பெரும் இடைவேளைக்குப் பின்னர், அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.   அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ் ஆகியோர் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்கின்றனர். எப்போது என்பது உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்கின்றனர் படக்குழுவினர். 

வரும் 2021ம் ஆண்டு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் வெளியிடப்படுகிறது. 

காத்திருப்பு முடிந்தது..
இதோ உங்களுக்காக வலிமையின் அடையாளம்

Here’s the powerful look of @tarak9999 as Bheem in #RRRMovie 🌊

@AlwaysRamCharan @ssrajamouli @aliaa08 @ajaydevgn @DVVMovies @RRRMovie  

#RamarajuForBheem #BheemFirstLook

From around the web