நீங்க டிரஸ் போட்டிருகிங்கன்னு ஒரு செகண்ட் நெனைச்சிட்டேன்: கமெண்ட் போட்ட ஸ்ரேயா ரெட்டி!  ஹன்சிகா புகைப்படம் வைரல்! 

வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்களை அவர் பதிவிட்டு வருகிறார். 
 
நீ டிரஸ் போட்டிருக்கனு ஒரு செகண்ட் நெனைச்சிட்டேன்'

பப்லி லுக், கியூட் எக்ஸ்பிரஷன்கள் என தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவர் மும்பையை சேர்ந்தவர் என்றாலும் அதிகம் தென்னிந்திய படங்களில் தான் நடித்துள்ளார். 

தற்போது கைவசம் மஹா, பார்ட்னர் ஆகிய தமிழ் படங்களை வைத்திருக்கிறார் ஹன்சிகா. மஹா படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. சிம்பு அந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா லாக்டவுனில் ஹன்சிகா தனது வீட்டில் தான் நேரத்தினை செலவிட்டு வருகிறார். தற்போது வெளியில் எங்கும் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் வருத்தத்தில் இருக்கும் அவர் தான் முன்பே வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்களை அவர் பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில் சமீபத்தில் ஹன்சிகா வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி கொண்டிருக்கிறது. அவர் மாலத்தீவு சென்ற போது எடுத்த புகைப்படம் அது. 

அந்த நீச்சல் உடையில் இருக்கும் டிசைன் தான் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்த போட்டோவுக்கு கமெண்ட் செய்துள்ள நடிகை ஸ்ரேயா ரெட்டி 'நீ டிரஸ் போட்டிருக்கனு ஒரு செகண்ட் நெனைச்சிட்டேன்' என கூறியுள்ளார். அந்த நீச்சல் உடை வழக்கமானாது போல இல்லாமல், மற்ற உடைகள் போல வடிவமைக்கப்பட்டிருந்தது தான் அவர் அப்படி நினைக்க காரணம். 

ரசிகர்கள் பலரும் வாவ் என்று தான் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரே நாளில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அந்த போட்டோவை லைக் செய்த்துள்ளனர்.

From around the web