சுய இன்பம் குறித்து ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஓவியா!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது
 
இத்தனை நாட்களாக எங்கிருந்தீர்கள். உங்களுக்காக காத்திருந்தோம்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏகத்திற்கும் பிரபலமானார் ஓவியா. அதன் பிறகு அவரை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிந்தது. ஆனால் அவர் படங்களை ஒப்புக் கொள்வதில் அவசரப்படவில்லை. தனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 

கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஓவியா கேரளாவில் இருக்கும் தன் வீட்டில் முடங்கியுள்ளார். இந்நிலையில் அவர் ட்விட்டரில் என்ன நடக்கிறது என்று கேட்டார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் பதில் அளித்தார்கள். மேலும் சில ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஓவியா பதில் அளித்தார். 

என்ன நடக்கிறது என்று ஓவியா கேட்டகற்கு விஜய் ரசிகர் ஒருவர் அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்தி பதில் போட்டார். அதை பார்த்த ஓவியா எஃப் வார்த்தையை பயன்படுத்தினார். அஜித், விஜய் ரசிகர்கள் மோதிக் கொண்டதை பார்த்த ஓவியாவோ, லூசுங்களாடா நீங்க என்று கேட்டுள்ளார். 

ட்விட்டரில் அஜித், விஜய் ரசிகர்கள் மோதிக் கொள்வது புதிது அல்ல. அவர்கள் சண்டை போடுவதற்காக ஹேஷ்டேக் உருவாக்கி அதை ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாக்கவிடுவதில் வல்லவர்கள். சில அஜித் ரசிகர்களோ ஓவியாவிடம் போய் வலிமை பட அப்டேட் கேட்டிருக்கிறார்கள். அதை பார்த்த விஜய் ரசிகர்களோ, லூசுங்களாக நீங்க, ஓவியா எப்படி வலிமை அப்டேட் கொடுப்பார் என்று கேட்டுள்ளனர். 

வலிமை பட இயக்குநர் ஹெச். வினோத்தும் சரி, தயாரிப்பாளர் போனி கபூரும் சரி அப்டேட் கொடுப்பதே இல்லை. இந்நிலையில் தான் அஜித் ரசிகர்கள் சம்பந்தமே இல்லாமல் யார், யாரிடமோ அப்டேட் கேட்கிறார்கள். அஜித் ரசிகர்களின் இந்த நிலையை பார்த்து விஜய் ரசிகர்கள் சிரித்தாலும் மற்றவர்கள் பாவப்படுகிறார்கள். இந்த தல ரசிகர்களுக்கு ராசியே இல்லப்பா. அஜித்தை வைத்து யார் படம் எடுத்தாலும் அப்டேட் மட்டும் கொடுப்பேனா என்று அடம்பிடித்து ரசிகர்களை கதறவிடுகிறார்கள் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள். 

அஜித், விஜய் ரசிகர்கள் சண்டை ஒரு பக்கம் நடந்தாலும் ஓவியா தன் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்துள்ளார். ஓவியாவும், ஆரவும் பிரிந்துவிட்டனர் என்று சில காலமாக பேசப்படுகிறது. இந்நிலையில் தான் சிங்கிள் என்று தெரிவித்துள்ளார் ஓவியா. 

அரசியலுக்கு வருவீர்களா என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு தேவைப்பட்டால் வருவேன் என்று பதில் அளித்துள்ளார் ஓவியா. நடிகைகள் அரசியலுக்கு வருவது புதிது அல்ல. ஓவியா அரசியலுக்கு வந்தால் எந்த கட்சியில் சேர்வார் என்று ரசிகர்கள் தற்போதே விவாதிக்கத் துவங்கிவிட்டனர். 

பிக் பாஸ் போட்டியாளர்களில் உங்களுக்கு பிடித்த போட்டியாளர் யார் என்று கேட்டதற்கு ஓவியா என்று பதில் அளித்துள்ளார். எல்லையில் பிரச்சனையாக இருக்கிறது, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது, பல விஷயங்கள் நடக்கிறது ஓவியா. இத்தனை நாட்களாக எங்கிருந்தீர்கள். உங்களுக்காக காத்திருந்தோம் என்று ரசிகர் ஒருவர் தெரிவித்தார். அதை பார்த்த ஓவியாவோ, நம்மால் கட்டுப்படுத்த முடியாததை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அடுத்த படம் குறித்து கேட்டவருக்கு, சீரிஸ்களில் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார் ஓவியா.

 ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துக்கொண்டிருந்த நேரத்தில், ரசிகர் கேள்விக்கு இப்போது தான் சுய இன்பம் செய்து முடித்தேன் என்று கூறினார். அதற்கு ஓவியாவும் "அது நல்லது" என்று கூலாக ரிப்ளை செய்தார்.

இதையடுத்து மற்றொரு நபர், "பெண்களின் வாழ்க்கையை கெடுப்பதைவிட சுய இன்பம் மிகவும் நல்லது" அப்படித்தானே மேடம் என ஓவியாவை கேட்க, அதற்கு ஓவியாவும், ஆம் சரிதான் என்று பதில் அளித்துள்ளார். மேலும், இன்னொரு ரசிகர், " அடுத்து படம் ஏதேனும் ரிலீஸ் ஆகுமா அல்லது கல்யாணமா? என கேட்டதற்கு, எனக்கு கணவர் தேவை கிடையாது. கல்யாணம் லிஸ்ட்லே கிடையாது என கூறி மனதில் பட்டத்தை பளீச்சுனு கூறிவிட்டார்.

From around the web