கமலுடனான நெருக்கம் பற்றி பூஜா குமார் ஓபன் டாக்!

இருவருக்கும் உறவு இருப்பதாக பேசப்பட்டது
 
கமல்ஹாசன் சாரை எனக்கு பல ஆண்டுகளாக பழக்கம்

தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பின் மூலம் உலக தமிழ் ரசிகர்களின் உலகநாயகனாக திகழ்ந்து வருபவர் நடிகர்
கமல்ஹாசன். இவருடன் நடிக்கும் நடிகைகள் பெரியளவில் பிரபலங்களாகிவிடுவார்கள். அதேநேரம் கமலுடன் நடிக்கும்
நடிகைகள் கிசுகிசுக்களிலும் சிக்குவார்களாம். அந்த வகையில் கெளதமி, அமலா, உள்ளிட்ட பல நடிகைகள் காதல், உறவு என
வதந்திகளுக்கு உள்ளாகியிருந்தார்கள்.

இந்நிலையில் தற்போதைய சினிமா களத்தில் கமலுடன் பல வருடங்கள் உறவில் இருக்கிறார் என்று பேசப்படுபவர் நடிகை பூஜா குமார்.
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வெளியான காதல் ரோஜாவே என்ற படத்தின் மூலம் தமிழ் நடிகையாக அறிமுகமானார் பூஜா.
இதையடுத்து 2013ல் வெளிவந்த கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் பெரிய இடைவெளி கொடுத்து ரீஎண்ட்ரி கொடுத்தார்.இந்த படத்தின் மூலம் அடுத்தடுத்த கமல் படங்களில் கமிட்டாகி நடித்தார். விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் போன்ற படங்களில் கமலுடன் நடித்து நெருக்கமானார்.


எங்கு சென்றாலும் ஜோடியாக கமலும் பூஜா குமாரும் சென்று வருவார்கள். இதனால் இருவருக்கும் உறவு இருப்பதாக பேசப்பட்டது.  சமீபத்தில் தனியார் இணையத்திற்கு அளித்த பேட்டியொன்றில் பூஜாகுமார் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் சாரை எனக்கு பல ஆண்டுகளாக பழக்கம். அவரது  குடும்பமும் எனக்கு நன்றாகவே தெரியும். அவரின் அண்ணன், ஸ்ருதி, அக்‌ஷரா உள்ளிட்ட குடும்பத்தாருடன் நெருக்கமாக இருந்து பழகியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார் . ஒரு நபரின் குடும்பத்தாருடன் நல்ல பழக்கம் வைத்திருப்பதால் தான்  அவர்களின் குடும்ப விழாக்களுக்கு சென்று கலந்து கொள்கிறேன்.

என் வாழ்க்கையில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் அது பற்றி யார் பார்ப்பது யார் கேட்பது என்று கூறியுள்ளார்.

From around the web