ஆவலுடன் மகள் bord ல் எழுதும் My father is coming..  3 மாதங்களுக்குப் பிறகு இன்று திரும்பும் பிரித்விராஜ்!

பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் நபராக பிரித்விராஜ் நடிக்கிறார்
 
படக்குழுவினர் கேரளா திரும்புவதற்காக சிறப்பு விமானம் ஏற்பாடு பண்ணப்பட்டுள்ளது

மோலிவுட் திரையுலகில் பிரித்விராஜ் நடித்து வரும் படம் ஆடுஜீவிதம். இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் படக்குழுவினர் ஜோர்டன் நாட்டிற்கு போயிருந்தனர் .

ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விமான போக்குவரத்து மொத்தமாக நிறுத்தப்பட்டதால் படக்குழுவினர் ஜோர்டனில் உள்ள வாடி ரம் என்கிற பாலைவன பகுதியிலேயே கடந்த 50 நாட்களுக்கும் மேலாக சிக்கி கொண்டுள்ளனர் .

 ஆடுஜீவிதம் படத்தில் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் நபராக பிரித்விராஜ் நடிக்கிறார் என்பதால் ஒரு சில நாட்கள் அரசு அனுமதியுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பாலைவனத்தில் படப்பிடிப்பை நடத்தி நிறைவு செய்து விட்டனர்.

இப்படியிருக்கும் நிலையில் இந்த படக்குழுவினர் கேரளா திரும்புவதற்காக சிறப்பு விமானம் ஏற்பாடு பண்ணப்பட்டுள்ளது. மேலும் நடிகர் பிரித்விராஜ் உள்ளிட்ட 58 பேர் கொண்ட படக்குழுவினர் ஜோர்டனிலிருந்து புதுதில்லி வந்து அங்கிருந்து மற்றொரு விமானம் மூலமாக இன்று கொச்சியில் வந்து இறங்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிருதிவிராஜ் மனைவி தன் இன்ஸ்ராகிராமில்  தன் கணவரும் ஆடுஜீவிதம் படக்குழுவினரும் இன்று திரும்ப போவது குறித்து பதிவிட்டுள்ளார் அவர்கள் பெண்குழந்தையும் தன் தந்தை வருகிறார் என போடில் எழுதி காட்டுகிறார்

View this post on Instagram

He’s back! 😊

A post shared by Supriya Menon Prithviraj (@supriyamenonprithviraj) on

From around the web