குண்டாக இருந்த காரணத்தோடு மகிழ்ச்சியான செய்தியையும் பகிர்ந்த ரம்யா!

என்.எஸ். கிருஷ்ணனின் பேத்தியான ரம்யா
 
செப்டம்பர் மாதம் நடிகர் சத்யாவைத் திருமணம் செய்துகொண்டார் ரம்யா

பாடகியும் பிக் பாஸ் சீசன் 2-வின் போட்டியாளருமான ரம்யா என்எஸ்கே, ஆண் குழந்தைக்குத் தாயாகியுள்ளார்.

தமிழ், தெலுங்கும் மலையாளம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருப்பவர் ரம்யா. மறைந்த நகைச்சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்ணனின் பேத்தியான ரம்யா, 2018-ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவனம் பெற்றார்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடிகர் சத்யாவைத் திருமணம் செய்துகொண்டார் ரம்யா என்எஸ்கே. இத்திருமணத்தில் பிக் பாஸ் போட்டியாளர்களான மும்தாஜ், ஜனனி மற்றும் நடிகை சனம் ஷெட்டி ஆகியோர் கலந்துகொண்டார்கள். ரம்யாவின் கணவர் சத்யா, மன்னர் வகையறா படத்திலும் நீலக்குயில் என்கிற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதைச் சமூகவலைத்தளங்களில் ரம்யா அறிவித்துள்ளார்.

இது குறித்து கூறியுள்ள ரம்யா "எல்லோருக்கும் வணக்கம்! நான் ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறேன் என்று நீங்கள் நிறைய பேர் மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்டீர்கள் ... அதற்கு, நான் விரைவில் அந்த செய்திகளைப் சொல்கிறேன் என்று கூறி அந்த கேள்விகளுக்கு பதிலளித்து வந்தேன். இப்போது சொல்லவேண்டிய நேரம் ... ஆம், நான் சமீபத்தில் ஒரு குழந்தையை பிரசவித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இதற்குப் பிறகு நான் எனது உடல்நலம் மற்றும் உடற்பயிற்சிகளிலும் கவனம் செலுத்தப் போகிறேன். என பதிவிட்டுள்ள ரம்யாவிற்கு அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

From around the web