வைரமுத்துவின் இரட்டை அர்த்த பாடல் வரிகளில் சில...

சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவின் இரட்டை அர்த்தம் தெறிக்கும் பாடல் வரிகளில் சில... 
 

சினிமா பாடலாசிரியர், கவிஞர் வைரமுத்துவின் இரட்டை அர்த்தம் கொண்ட 7 பாடல்களில் உள்ள குறிப்பிட்ட வரிகளை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

சினிமா பாடலாசிரியர், கவிஞர் வைரமுத்துவின் இரட்டை அர்த்தம் கொண்ட 7 பாடல்களில் உள்ள குறிப்பிட்ட வரிகளை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

இந்த வரிகளுக்கு விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

மழை (2005)

முன் கோபுர அழகை
உன் தாவணி மூடியதே
உன் ரகசியத்தை மழை துளி
அம்பலம் ஆக்கியதே

ஜீன்ஸ்(1998)

பெண்ணே உனது
மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை
சுற்றிப் போனேன் ஆஹா
அவனே வள்ளலடி

அந்நியன்(2005)

சுட்ட பால் போல
தேகம் தாண்டி உனக்கு
அதில் பாலாடை
மட்டும் கொஞ்சம் விலக்கு

ரிதம்(2000)

வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே
வளைவுகள் அழகு உங்கள் வளைவுகள் அழகு
ஹோ. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்
நதிகளின் குணமே அது நங்கையின் குணமே

சாமுராய் (2002)

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடம் உண்டு
பூக்காரன் பூக்காரன் அட
உங்களில் யார் உண்டு
ஒரு புதையல் ஒரு புவியல்
மழை வாசல் என்னிடம் உண்டு
அலிபாபா அலிபாபா அட உங்களில்
யார் உண்டு

ரெட் (2002)

பழுத்தாச்சு
நெஞ்சம்பழம் பழுத்தாச்சு
அணில் கிட்ட குடுத்தாச்சு
அணில் இப்ப துள்ளி குதிக்கலாம்
அப்பப்பா பல்லும் பதிக்கலாம்

கோழி கூவுது (1982)

பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்கு தானே
எனக்கு தானே

- வீரக்குமார் முத்து

இன்னும் கொஞ்சம் போனஸ் இந்த ஏழு

மே மாசம் 98 இல் மேஜர் ஆனேனே பாடலில் மேஜர் சுந்தர்ராஜன் திகிக்கும் அளவுக்கு பல ரெட்டை அர்த்த வரிகள்

1 வந்தது மலர்கள் பூத்தது எந்தன் தேகத்தில், மலர்கள் எல்லாம் கனியாய் மாறும் மாலை நேரத்தில்

2. அலைபாயுதே படத்தில் ஸ்நெகிதனே பாடலில் கவிஞர் ஸ்நேகன் பிக் பாஸ்ஸில் வீசிய காமப்பார்வைக்கு ஈடாக காமவரிகள்

ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி சேவைகள் செய்ய வேண்டும்

3. ரோஜா படத்தில் தேன்நிலவுக்கு சென்ற தம்பதிகளுக்கு ஏற்றார்ப் போல

புது வெள்ளை மழை, இங்கு பொழிகின்றது

4. அந்நியன் படத்தில் அநியாயத்துக்கு ரெட்டை அர்த்த வரிகள் ஐயங்காரு வீட்டு அழகே பாடலின் இறுதியில் ஒரே போடு

வான் மழையில் நனைந்தால் பயிர்கள் உருவாகும்
ஆண் மழையில் நனைந்தால் உயிர்கள் உருவாகும்

5. சுத்தி சுத்தி வந்தீக பாடலில் சுத்தி சுத்தி ரெட்டை அர்த்த வரிகள்

கண்ணால் எதயோ பாத்தீக, காயா பழமா கேட்டீக

6. காற்று வெளியிடையில் சாரட்டு வண்டியில் பாடலில் கவிஞர் கொஞ்சம் ஓவராவே வெளியிட்டு விட்டார்.

சேலைக்கு சாயம் போக மட்டும், உன்ன நான் வெளுக்க வேண்டுமடி. பாடுபட்டு விடியும் பொழுது வெளியில் சொல்ல பொய்கள் வேண்டுமடி

7. ராவணன் திரைப்படத்தில் கள்வரே பாடலில்

வலிமிகு இடங்கள் வலி மிகா இடங்கள் தங்களுக்கு தெரிகின்றதா?

 

From around the web