வெளியிட்ட திருமண வீடியோ கிளிபபின் ரகசியம் உடைத்த சோனியா அகர்வால்!  குவியும் வாழ்த்துக்கள்!

தாலி கட்டும் புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்திருந்தார்
 
ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

கடந்த 2002ல் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் கொண்டேன். அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். அதனையடுத்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர் 2006ல் இயக்குநர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவரும் நான்கு ஆண்டுகளில் விவாகரத்து செய்து கொண்டனர்.

சமீபத்தில் சோனியா அகர்வால் தனது இரண்டாவது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்ததார் . அதில் மூன்று நாட்களின் தனது திருமணம் என்றும், கூடுதல் விவரங்களுக்கு காத்திருங்கள் என்று குறிப்பிட்டு தாலி கட்டும் புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்திருந்தார்.

அவருக்கு திருமணம் என்று கருதி ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த சோனியா அகர்வால், அவர் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து திருமணத்தை திட்டம் போட்டு செய்து கொடுக்கும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும், தனக்கு திருமணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.


 

From around the web