கண்டிப்பானவர் என்னுடைய ஒர்க் அவுட் பார்ட்னர்! அஞ்சலியின் வைரல் வீடியோ!

அவர் லாக்டவுனில் எனது வொர்க் அவுட் பார்ட்டனர் இவர் தான் போல
 
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்

நடிகை அஞ்சலி சமூக வளைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை அள்ளி வருகிறார்.

தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவரது ஆர்ம்ஸை அசைப்பதற்கு ஏற்றவாறு அவரது செல்ல நாய்குட்டியும் தலையாட்டுகிறது.

இந்த வீடியோவை பதிவிட்டுள்ள அவர் லாக்டவுனில் எனது வொர்க் அவுட் பார்ட்டனர் இவர் தான் போல. அவரை பாருங்கள். மிகவும் கண்டிப்பானவர் என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான நாடோடிகள் 2 படத்தில் நடித்த நடிகை அஞ்சலி, அனுஷ்காவின் நிசப்தம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் ஆனந்த பைரவி, ஓ, காண்பது பொய்' உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.
 

From around the web