திரை உலகில் படுக்கைக்கு கூப்பிடும் கோட் வேர்டு அது: ஷெர்லின் சோப்ரா!

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது உண்மைதான்
 
நான் பாலிவுட்டுக்குள் நுழைந்த பிறகு திரைப் பட வாய்ப்புக்காக எனது புகைப்படங்களை எடுத்து கொண்டு படவாய்ப்புக்காக அலைவேன்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷெர்லின் சோப்ரா ஆவார். ஐதராபாத்தை சேர்ந்த இவர் மிஸ் ஆந்திரா பட்டத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஹிந்தி பிக் பாஸ் சீசன் 3யில் பங்குபெற்று பிரபலமானார்.

இவர் பாலிவுட் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த நடிகை ஷெர்லின் சோப்ரா , பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது உண்மைதான் என கூறியுள்ளார்.

இதை பற்றி தொடர்ந்து பேசிய அவர் நான் பாலிவுட்டுக்குள் நுழைந்த பிறகு திரைப் பட வாய்ப்புக்காக எனது புகைப்படங்களை எடுத்து கொண்டு படவாய்ப்புக்காக அலைவேன். அப்போது எனது புகைப்படங்களை பார்ப்பவர்கள் நள்ளிரவில் டின்னரில் சந்திக்கலாமா என்று என்னிடம் கேட்டனர். நள்ளிரவில் என்ன டின்னர் என்று புரியாமல் எப்போது வரவேண்டும் என்று கேட்டால் அவர்கள் இரவு 11 மணி அல்லது 12 மணிக்கு வரச் சொல்வார்கள்.

அவர்கள் அப்படிக் கூறுவதற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் நீண்ட நாட்கள் நான் குழப்பத்தில் இருந்தேன். பின்னர் பலமுறை எனது புகைப்படங்களை எடுத்துக்கொண்டு பட வாய்ப்புக்காக சென்றபோதுதான் எல்லாருமே அதே வார்த்தையை கேட்டார்கள். அப்போதுதான் எனக்கு தெளிவாக புரிந்தது டின்னர் என்றால் என்னுடன் படுக்கைக்கு வா என்பது போல அர்த்தமமென்று. அதன்பிறகு டின்னர் வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

பிரபல திரையுலகை சேர்ந்த ஒருவர் என்னை டின்னருக்கு வா என அழைத்த போது நான் டயட்டில் இருக்கிறேன் . டின்னர் சாப்பிட மாட்டேன். பிரேக் பாஸ்ட் அல்லது லஞ்சுக்கு வேண்டுமானால் நான் வருகிறேன் என்று கூறியதாகவும் நடிகை ஷெர்லின் சோப்ரா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web