கொரோனாவை எரிக்கும் வெப்பம் கோவாவில்! என்ன சொல்றாங்க?

எல்லா மொழிகளிலும் நடிக்க விரும்புகிறேன்
 
ஹிந்தி படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்

தல அஜித்தின் திரையுலக பயணத்தில் அவரது ரசிகர்களால் மறக்க முடித்த படங்களில் ஒன்று பில்லா.
அதனை போலவே இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் ரசிகர்கள் எளிதில் மறந்து விட மாட்டார்கள்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பாலிவுட் நடிகை புருனா அப்துல்லா என்பவர் நடித்திருந்தார்.


 

இவர் தற்போது, ஹிந்தி படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இது குறித்து, அவர் பேசும்போது, ”வாய்ப்பு கிடைத்தால், உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் நடிக்க விரும்புகிறேன். நடிப்புக்கு மொழி ஒரு தடையில்லை,” என்று கூறியுள்ளார்.

இந்தியில், சோனம் கபூர், இர்பான் கான் நடிப்பில் புனித் மல்ஹோத்ரா இயக்கிய காமெடி படம், ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ். இதில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் புருனா. அடுத்து அக்‌ஷஷ்குமார், தீபிகா படுகோன் நடிப்பில் டேவிட் தாவன் இயக்கிய, 'தேஸி பாய்ஸ்', ரிதேஷ் தேஷ்முக், விவேக் ஓபராய் நடித்த கிராண்ட் மஸ்தி, சல்மான் கானின் ஜெய் ஹோ உட்பட சில படங்களில் நடித்திருந்தார்.

இதையடுத்து அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்தார். இந்நிலையில் மற்ற நடிகைகளைப் போல இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஹாட் புகைப்படங்களை இவர் பதிவிடுவது வழக்கம். பிகினி படங்களையும் பதிவிடுவார். 

இந்நிலையில் இப்போதும் ஹாட் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். கோவாவில் இருந்து அவர் எடுத்துள்ள இந்தப் போட்டோவுக்கு கேப்ஷனாக, இப்போது கோவாவில் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று பதிவிட்டுள்ளார். இதை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் கமென்ட் அடித்துள்ளனர்.

கொரோனாவுக்காக மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கும்போது அவர் இப்படி பதிவிட்டுள்ளதை நெட்டிசன்ஸ் கலாய்த்து வருகின்றனர்.
என்னது கோவாவுல இருந்தா அதிர்ஷ்டசாலிகளா? இந்த நேரத்துல வீட்டுல இருந்ததான் அதிர்ஷ்டசாலிகள்மா, தெரிஞ்சுக்கோ' என்று ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார். கோவோ என்ன, கொரோனாவுக்கு எதிர்ப்பு சக்தியைவா வச்சிருக்குது? என்று சிலர் கலாய்த்துள்ளனர். உங்க ஹாட் போட்டோவை பார்த்தா கொரோனா கூட குப்புறப் படுத்திரும்' என்று சில ரசிகர்கள் கிண்டலாகத் தெரிவித்துள்ளனர்.

From around the web