அஜித்தின் வலிமை! ரிலிஸ் குறித்து போனிகபூர்...! 

தற்போது வலிமை படத்தில் பணியாற்றும் ஊழியர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பாதுகாப்பே நமக்கு முக்கியம்
 
அதிக பட்ஜெட்டில் எடுக்கக்கூடிய, திரையரங்கு அனுபவத்தைத் தரக்கூடிய படங்கள் எல்லாம் முதலில் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும்

அஜித் நடித்து வரும் வலிமை படம் திரையரங்கில் தான் முதலில் வெளியாகும் எனத் தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார்.

நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணையும் இப்படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா.

ஊழியர்களின் பாதுகாப்பு கருதி வலிமை படம் தொடர்பான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டாம் எனத் தயாரிப்பாளர் போனி கபூருக்கு அஜித் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸின் பாதிப்பு குறைந்த பிறகு போஸ்ட் புரொடக்‌ஷன் உள்ளிட்ட வலிமை படம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளலாம்.

தற்போது வலிமை படத்தில் பணியாற்றும் ஊழியர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பாதுகாப்பே நமக்கு முக்கியம் என போனி கபூர், இயக்குநர் வினோத் ஆகியோரிடம் அஜித் கூறியதாகவும் அதற்கு இருவரும் சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் வலிமை படத்தின் வெளியீடு தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் நடிக்கும் வலிமை, அஜய் தேவ்கன் நடிக்கும் மைதான், பவன் கல்யாண் நடிக்கும் வக்கீல் சாப் (பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்) என மூன்று படங்களைத் தயாரித்து வருகிறார் போனி கபூர். ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இப்படங்கள் பற்றி அவர் கூறியதாவது:

அதிக பட்ஜெட்டில் எடுக்கக்கூடிய, திரையரங்கு அனுபவத்தைத் தரக்கூடிய படங்கள் எல்லாம் முதலில் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும் என எண்ணுகிறேன். நான் தயாரிக்கும் படங்கள் திரையரங்குகளில் வெளியாவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

From around the web