இந்த கல்யாண வேலைல... இப்ப சமந்தா ரொம்ப பிஸி! 

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா. 

 
அக்கினேனி அகில் திருமணம் பிக்ஸ் ஆகி இருப்பதாக தெரிகிறது. முழு பொறுப்பும் எடுத்து அகில் திருமண வேலைகளில் சமந்தா  ஈடுபட்டு வருகிறார் என்ற செய்தி அக்கினேனி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா. 

ஹாலிவுட் மோஸ்ட் எலிஜிபுள் பேச்சுலர் அக்கினேனி அகில் திருமணம் பிக்ஸ் ஆகி இருப்பதாக தெரிகிறது. முழு பொறுப்பும் எடுத்து அகில் திருமண வேலைகளில் சமந்தா  ஈடுபட்டு வருகிறார் என்ற செய்தி அக்கினேனி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 

லாக்டௌன் நேரத்தில் மோஸ்ட் எலிஜிபுள் பேச்சுலர்கள்  அனைவரும் ஒவ்வொருவராக பேச்சிலர் குரூப்பில் இருந்து சம்சாரி ஆகி வருகிறார்கள். இதுவரையில் நிகில், நிதின், ரானா ஆகியோர் திருமணம் செய்துகொண்டு பேச்சிலர் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள்.

மெகாஸ்டார் குடும்பத்திலிருந்து வருண் தேஜ், சாயி தரம் தேஜ் திருமணத்திற்கு தயாராகி வருவதாக ஹின்ட் அளித்துள்ளார்கள்.

 இனி இதே நேரத்தில் அக்கினேனி குடும்பத்தில் கூட மங்கள வாத்தியங்கள் முழங்குவதற்கு தயாராகி வருவதாக தெரிவதால் ஆர்வம் அதிகரித்துள்ளது. 

அக்கினேனி நாகார்ஜுனா,  அமலா தம்பதியரின் மகன் டாலிவுட் இளம் ஹீரோ அகில்  மணமேடை ஏற உள்ளார் என்றும் அந்த பொறுப்புகள் அனைத்தும் அவருடைய அண்ணி சமந்தா ஏற்றுள்ளார் என்றும் பிலிம் நகரில் டாக் உலா வர ஆரம்பித்துள்ளது.

 உண்மையில் அகில் திருமண விஷயம் எப்போதிலிருந்தோ மீடியாவில் வைரலாகி வருகிறது. நாக சைதன்யா திருமணமான இரண்டு மூன்று மாதங்களிலேயே அகில் திருமணம் டாபிக் வெளியில் வந்தது. அப்போது ஸ்ரேயா பூபாலோடு திருமணம் நிச்சயமாகி எதிர்பாராதவிதமாக கேன்சல் ஆனது. அதற்கு காரணம் என்னவென்பது அஃபிஷியலாகத் தெரியவில்லை. ஆனாலும் அப்போதிலிருந்து அகில் திருமண விஷயம் ரசிகர்களிடம் ஹாட்   இஷ்யூவாக தொடர்ந்து இருந்து வந்தது. அதன் பின்பு அகிலுக்கு மாமா முறையான நடிகர் வெங்கடேஷ் மகளோடு அகில் திருமணம் நிச்சயம் ஆனதாக பெரிய அளவில் ரூமர்ஸ் வந்தன. ஆனால் அதில் உண்மையில்லை என்று தக்குபாடி ஃபேமிலியைச்  சேர்ந்த ஒருவர் அறிவித்துவிட்டதால் அந்த டாபிக் அதோடு நின்றுபோனது.

இனி இத்தனை   நாட்கள் கழித்து அகில் திருமணச் செய்தி மறுபடியும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அக்கினேனி ஃபேமிலி ரகசியமாக அகில் திருமணம் தொடர்பான வேலைகளை செய்து வருகிறது என்றும்  அண்மையில் ஒரு பிரபல  பிசினஸ்மேன் மகளோடு அகில் திருமணம் ஃபிக்ஸ் ஆகியிருக்கிறது என்றும் பிலிம் நகரில் செய்தி உலா வருகிறது. அது மட்டுமின்றி இதன் பின்னால் அக்கினேனி சமந்தாவின் முயற்சி பெருமளவு இருக்கிறது என்றும் அவரே இரு குடும்பங்களோடும் பேசி அகில் திருமணப் பொறுப்பை தோள் மீது போட்டுக் கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதனால் அகில் திருமணம் மறுபடியும் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஊட்டி வருகிறது

அகிலின் சினிமாக்களை பார்த்தால்... அகில், ஹலோ, மிஸ்டர் மஜ்னு சினிமாக்களில் எதிர்பார்த்த அளவு பலன் கிடைக்காவிட்டாலும்  இந்த இளம் ஹீரோ தனது 4வது சினிமாவான 'மோஸ்ட் எலிஜிபுள் பேச்சிலர்' சினிமாவோடு ரசிகர்கள் முன் வரப்போகிறார். பொம்மரிலு பாஸ்கர் இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படம் மிக விரைவில் ரிலீசாக உள்ளது. இதில் அகில் ஜோடியாக பூஜா ஹெக்டே  நடிக்கிறார்.

From around the web