Press "Enter" to skip to content

போதும் நிறுத்துங்க! முகேனை வெறுக்கும் ரசிகர்கள்… காரணம் யார் தெரியுமா?

mugen rao

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முகேனை விஜய் தொலைக்காட்சி பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வைப்பது ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் முகேன். இதை இன்னுமே தர்ஷன் மற்றும் கவினின் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில், சூப்பர் சிங்கர் உட்பட விஜய் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளிலும் முகேன் கலந்து கொண்டு வருகிறார். மேலும், முகேனின் வெற்றிப்பயணம் என்கிற தலைப்பில் ஒரு புதிய நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி தயாரித்துள்ளது. நாளை வெளியாகவுள்ள இந்நிகழ்ச்சியின் புரமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதைக்கண்ட நெட்டிசன்கள் பலரும் முகேனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிலும், கவினின் ஆதரவாளர்கள் ‘முகேன் அப்படி என்ன சாதித்துவிட்டார்? என இப்படி அவரையே வைத்தே நிகழ்ச்சியை நடத்தி வருகிறீர்கள்.. இது வெறுப்பையே உண்டாக்குகிறது’ என பதிவிட்டு வருகின்றனர்.

 

The post போதும் நிறுத்துங்க! முகேனை வெறுக்கும் ரசிகர்கள்… காரணம் யார் தெரியுமா? appeared first on Cinereporters Tamil.


Source: டிவி-தொடர்கள்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *