Category: செய்திகள்

  • காதல் திருமணம்.. இல்லையேல் சிங்கிளாகவே இருப்பேன்.. திரிஷா அதிர்ச்சி பேட்டி…

    தமிழ் சினிமாவில் 20 வருடங்களாக நடித்து வருபவர் நடிகரி திரிஷா. இடையில் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியை காதலித்தார். ஆனால், சில காரணங்களால் அவரை பிரிந்தார். அதேபோல், தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் வருண்மணியுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் பிரிந்தார். அதன்பின் கடந்த சில வருடங்களாக அவரின் திருமணம் பற்றி எந்த செய்தியும் வெளியாகவில்லை. தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், திருமணம் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:…

  • டாக்டர் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு – ஷாக் ஆன சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

    கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் டாக்டர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இடம் பெற்ற ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நேரத்தில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்பு முடங்கிப்போனது. தற்போது சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளது எனவே, டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள புதிய போஸ்டரில்…

  • வருத்தப்பாடாத வாலிபர் சங்கம் புகழ் நடிகர் புற்றுநோயால் பாதிப்பு….

    வருத்தப்பாடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் தவசி.குறிப்பாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ‘கருப்பன் குசும்புக்காரன்’என அவர்  பேசிய வசனம் மிகவும் பிரபலம். இப்போதும் அவரின் அந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் புகைப்பட மீம்ஸாக பல இடங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். புற்றுநோய் அவரின் உடலை உருக்கிவிட்டது. இது தொடர்பான அவரின் புகைப்படம் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய…

  • உனக்கு பேட்டிலாம் கொடுக்க முடியாது.. பேட்டியிலிருந்து வெளியேறிய இரண்டாம்குத்து இயக்குனர்….

    கௌதம் கார்த்திக், யாஷிகா சோப்ரா உள்ளிட்ட சிலர் நடித்து 2018ம் ஆண்டு  வெளியான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து. இப்படத்தை சந்தோஷ் குமார் இயக்கியிருந்தார். இப்படம் முழுவதும் ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால், இளசுகள் கூட்டம் கூட்டமாக இப்படத்தை பார்த்தால் இப்படம் வெற்றி அடைந்தது. தற்போது அதன் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சந்தோஷ் குமார் மற்றும் டேனியல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பான போஸ்டர் மற்றும் டீசர் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி கடும் கண்டனத்திற்கு…

  • எந்த பாடல் வீடியோவும் செய்யாத சாதனை…  புதிய உச்சத்தை தொட்ட ‘ரவுடி பேபி’…

    தனுஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் நடித்த திரைப்படம் மாரி 2. இப்படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யுடியூப்பில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த பாடல் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் யுடியூப்பில் பதிவேற்றப்பட்டது. அப்போது முதலே இப்பாடலை பல லட்சம் பேர் பார்த்து ரசித்து வந்தனர். தற்போது இந்த பாடல் வீடியோ ஒரு பில்லியன் அதாவது, 100 கோடி பார்வையாளர்கள் இந்த பாடலை பார்த்து ரசித்துள்ளனர்.  தென்னிந்திய திரையுலகில் இதுவரை எந்த பாடலும்…

  • பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் அழகிரி – தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….

    திமுக தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர் மு.க.அழகிரி. கருணாநிதியின் மறைவுக்கு பின் கட்சியை ஸ்டாலின் நிர்வகிக்க துவங்கி பின் அழகிரி அரசியலில் இருந்தே விலகியிருந்தார். இந்நிலையில், விரைவில் அவர் தனிக்கட்சி துவங்கவிருப்பதாகவும், வருகிற 20ம் தேதி கட்சி துவங்குவதுபற்றி தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் அவர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அநேகமாக, அவரின் கட்சிக்கு கலைஞர் திராவிட முன்னேற்றக்கழகம் என பெயர் வைக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.…

  • காதல் கண்ண மறைக்குதா?.. பாலா – ஷிவானியை கலாய்க்கும் பிக்பாஸ்.. (வீடியோ)

    பிக்பாஸ் வீட்டில் எல்லோரிடமும் எரிந்து விழும் பாலாஜி முருகதாஸ், ஷிவானி நாராயணிடம் மட்டும் கொஞ்சி குலவி ரொமான்ஸ் செய்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். பிக்பாஸ் சக போட்டியாளர்களும் அவரை இது விஷயமாக கிண்டலடித்துதான் வருகின்றனர். இந்நிலையில், இன்றைய புரமோ வீடியோவில் ‘காதல் கண்ணை மறைக்குது’ என பாலாவை பிக்பாஸ் கலாய்க்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும், காதல் எல்லாம் ஒன்றுமில்லை என பாலா கோபப்படுகிறார். மேலும், ஷிவானியிடம் சென்று ‘எனக்கு உன் மேல் காதல் இல்லை.…

  • கடலுக்கடியில் கணவருடன் காஜல் அகர்வால் – வைரலாகும் புகைப்படம்

    தமிழ் சினிமாவில் விஜய், அஜித், தனுஷ், விஷால்,ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் காஜல் அகர்வால். சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கவுதம் கிச்சிலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அதன்பின் ஒவ்வொரு நிகழ்வையும் புகைப்படமாக காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். புதிய வீட்டிக்கு குடி பெயர்ந்தது, மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றது ஒன்றை கூட அவர் விட்டு வைக்கவில்லை.…

  • புதிய கட்சி துவங்குகிறார் அழகிரி.. விரைவில் முக்கிய அறிவிப்பு….

    மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி தனிக்கட்சி துவங்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. திமுகவின் தென்மண்டல செயலாளராக இருந்த மு.க.அழகிரி கடந்த 2014ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் திமுகவிற்கு பலமுறை தூதுவிட்டும் அவர் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், விரைவில் அவர் தனிக்கட்சி துவங்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்காக வருகிற 20ம் தேதி அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்யவுள்ளார். அதன்பின் அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். …

  • அண்ணானோடு ஓவர்.. அடுத்து தம்பியுடன்… களம் இறங்கும் சுதா கொங்கரா…

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் எல்லோரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு பின் சூர்யாவின் தம்பியும்,  நடிகருமான கார்த்தியை வைத்து ஒரு புதிய படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இதுவும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது எனக்கூறப்படுகிறது.