பிரபல நடிகை வீட்டில் பிணமாக மீட்பு – ரசிகர்கள் அதிர்ச்சி

arya banergi

arya banergi

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ஆர்யா பானர்ஜி. கொல்கத்தாவில் தனியாக வசித்து வந்தார். ‘லவ் செக்ஸ் அர் டோஹா’ எனும் படம் மூலம் பிரபலமானார். மாடலில் துறையிலும் பிரபலமானார். அதன்பின் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை விவரிக்கும் ‘டர்ட்டி பிக்சர்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இன்று அவர் தனது வீட்டில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் பணிபுரியும் பெண் கொடுத்த தகவலில் போலீசார் அங்கு சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் தற்கொலை செய்தாரா இல்லை கொலையா என்பது தெரியவரும்.

Leave a Reply