பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும் நடிகை திவ்யபாரதி. பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்கி வருகிறார்.
இப்படம் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாம். ஏனென்றால் காதலித்த அனைவரும் ஒரு கட்டத்திற்குப் பிறகு கூறுவது “நான் பேச்சுலர் ஆகவே இருந்திருக்கலாம்” எனும் வசனம் தான். இந்த வசனத்தை தான் படக்குழுவினர் பேச்சுலர் என படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.
பேச்சுலர் படத்தை புரமோஷன் செய்வதற்காக தொடர்ந்து இப்படத்தை பற்றிய தகவல்கள் ஏதாவது சமூகத்தளங்களில் படக்குழுவினர் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் பேச்சுலர் படத்தில் நடித்துள்ள திவ்ய பாரதி வெளியிட்டுள்ள புகைப்படம் அனைத்து ரசிகர்களாலும் பார்க்கப்பட்டு வைரலாகி வருகின்றன. திவ்யபாரதி நான்கு படங்களை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதற்கு தங்களது கருத்துக்களை ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் தெரிவித்து வருகின்றனர். என்னா ஷேப்யா… செம ஹார்ட் ஒர்க் என்று ஒருவர் கருத்துப் பதிவிட்டிருக்கிறார்.
பேச்சுலர் படத்தின் பஸ்ட் லுக் மற்றும் இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் போன்றவை அண்மையில் வெளிவந்து ரசிகர்களிடம் பரவலானது.
இந்நிலையில் தனது அடுத்த படமும் தமிழில் தான் எனவும் தெலுங்கு, மலையாளம் படங்களில் நடிப்பதற்கு மிகவும் ஆசை எனவும் கூறியுள்ளார் திவ்யபாரதி. Bachelor படத்தின் கிளைமாக்ஸ் காட்சி என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. அது ரசிகர்களிடையே நல்ல மற்றும் கலவையான வரவேற்பையும் பெற்றது என்று கூறினார் திவ்யபாரதி.
தொடர்ந்து 2 படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாகவும் அதில் பிக்பாஸ் மூலம் பிரபலமான முகேன் ராவ் உடன் சேர்ந்து நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தனது இன்னொரு படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. வரும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் படங்கள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்றார் அவர்.