Press "Enter" to skip to content

தூறல் நின்னு போச்சு – கிளாசிக் சினிமா

Thooral Ninnu pochu – பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் பாட்டை காலையில் கேட்க நேர்ந்தது.நீண்ட நாள் ஆச்சே என நினைத்து தூறல் நின்னு போச்சு படத்தை ஓடவிட்டு பார்க்கலாம் என பார்க்க ஆரம்பித்தேன். எழுத்துப் போட ஆரம்பிக்கும் போதே படம் உள்ளே இழுத்துக் கொண்டது. ஓட விட வேண்டும் என நியாபகமே வராமல் முழு படமும் ஓடி முடிந்து விட்டது.

ஒரே ஒரு தனி மனிதன் தனக்கு நீதி கிடைக்க வேண்டி 100 கார்களை உடைத்து 200 பேரை அடித்துப் போட்டு கனவில் மட்டுமே காண முடியும் சாகசங்கள் செய்து நீதியை நிலை நாட்டுவதைத்தான் நெடுங்காலமாக சினிமாவில் காண்பித்து வருகிறார்கள்.இன்றும் இதில் எந்த மாறுபாடும் இல்லாமலே படங்கள் வெளிவருகிறது.அதுதான் மக்களின் பொழுது போக்கு படங்கள் என்று பெயர் வாங்கி விட்டன.அப்படியே அதற்கு மாறாக சில படங்கள் வாழ்வியலோடு ஒன்றினைந்து எந்த சாகசமும் செய்யாமல் மக்களுக்கு எல்லா உணர்ச்சிகளையும் கொடுத்து பொழுதும் போக்குகின்றன.

அதில் ஒரு படம் தான் தூறல் நின்னு போச்சு.பாக்கியராஜ் திரைக்கதை வித்தகர் என்பது சிறுகுழந்தைக்கும் தெரியும்.ஆனால் ஏன் என தெரிய வேண்டும் என்றால் இந்தப் படத்தை பார்த்தால் தெரிந்து விடும்.வழக்கமான கதைதான்.நாயகன் நாயகி காதல் நாயகியின் அப்பா வில்லன் நாயகனுக்கு உதவும் ஒர் நல்ல மனிதன்.இதில் என்ன கடைசி வரை ஒன்றிப் படம் பார்க்க வைக்க முடியும் என்றால் முடியும், சரியான திரைக்கதை இருந்தால் கண்டிப்பாக முடியும்.

பாக்கியராஜ் கேள்வி கேட்டு யோசிக்க வைத்து பதில் சொல்லும் திரைக்கதையை பெரிதாக கையில் எடுப்பார் இந்த படமும் அதற்கு விதிவலக்கு இல்லை.படத்தின் முதல் காட்சி ஒரு கேள்வியை முன் வைப்பது போன்றும் அடுத்த காட்சி அதற்கான விடை போல இருக்கும்.படத்தின் இரண்டாம் பகுதியில் நம்பியாருடன் பாக்கியராஜ் அமர்ந்திருப்பார்.ஒரு மாதத்தில் இருவரையும் சேர்த்து வைப்பேன் என ஊரில் சபதம் போட்டிருப்பார் நம்பியார்.அந்த நேரத்தில் நாயகி அவர்களை கண்டும் காணாதவாறு செல்வாள்.

அப்போது நம்பியார் பாக்கியராஜைப் பார்த்து இது நடக்கிற காரியம் இல்லை போல எதாவது செஞ்சு அவளை கல்யாணம் செய் என சொல்லி ஒவ்வொரு ஐடியாவக கொடுப்பார்.படம் பார்க்கும் போது நமக்கு நாயகன் என்ன செய்ய போகிறான் என ஒரு பெரிய கேள்வி இருக்கும்.பாக்கியராஜ் அந்த கேள்வியோடு அந்த காட்சியை முடித்து விட்டு அடுத்தக் காட்சியை அதற்கான விடை கொடுப்பது போல எடுத்திருப்பார்.

ஒரு காதல் படத்தில் முக்கியம் நாயகனும் நாயகியும் சேர வேண்டும் என பார்வையாளர்கள் நினைக வேண்டும்.அப்படி நினைத்து விட்டால் அது கண்டிப்பாக வெற்றிப் படம் தான்.அதற்கு வலுவான காதல் காட்சிகள் வேண்டும்.பாக்கியராஜ் காதல் காட்சியை மிக வலுவாக அமைப்பார் அதோடு அதில் நகைச்சுவை அதிகமாகவும் முகம் சுழிக்காதவாறும் காமம் மிகப் பெரும் பங்களிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வார். இந்தப்படத்திலும் அப்படியான காட்சி ஒன்று உண்டு.நாயகிக்கு ஒன்றும் தெரியாது.எனவே முதலிரவில் செய்வதாவது தெரியுமா என்பதை அறியும் வகையில் நடைபெறும் நாயகன், நாயகிக்கு இடையிலான உரையாடல்களுக்கு யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது.

அடுத்ததாக பாடல்கள்,இளையராஜா பெரும் பங்களிப்பு செய்திருப்பார்.செங்கமலம் சிரிக்கிது,பூபாளம் இசைக்கு பூமகள் ஊர்வலம்,ஏரிக்கரை பூங்காற்றே, என் சோக கதைய கேளு தாய்க்குலமே என அத்தனை பாடல்களும் கிளாசிக்தான்.

தூறல் நின்னு போச்சு-30 வருடங்களுக்கு மேல் ஆகியும் தூறல் நிற்க வில்லை.

– தோழன் தமிழ்…

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *