ஒரு அசைவ விருந்தில் நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கலந்து கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
தர்பார் திரைப்படத்திற்கு பின் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் கன்னியாகுமாரியில் நடைபெற்றது. தான் நடிக்கும் படம் உட்பட எந்த சினிமா விழாவிலும் கலந்து கொள்ளாத நயன்தாரா இதிலும் கலந்து கொள்ளவில்லை.
அதேநேரம், வெளிநாட்டில் உறவினர் வீட்டில் நடைபெற்ற நன்றி கூறும் நிகழ்ச்சியில் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கலந்து கொண்டார். அதில் அசைவ விருந்து சமைத்து தயாராக வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்காக நயன்தாரா விரதம் இருப்பதாக ஊடகங்களில் ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், அதில் உண்மையில்லை என்பது இந்த வீடியோ மூலம் அம்பலமாகியுள்ளது.
Happy Thanksgiving
With Some magical
powers #ThanksgivingSpecial pic.twitter.com/aVtvUcNab0
— Nayanthara
(@NayantharaU) November 29, 2019
The post அசைவ விருந்தில் நயன்தாரா – அம்மன் படத்துக்காக விரதம்னு சொன்னாங்க! appeared first on Cinereporters Tamil.
Source: டிரைலர்
Be First to Comment