
ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும், த்ரிஷாவும் ஒரே காரில் சென்று பங்கேற்றனர். இருவரும் ஒரே நிற உடையில் பங்கேற்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
முன்னதாக, கடந்த மாதம் ஒரு பேட்டியில் தமிழக பாஜக., தலைவர், விஜய் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, “விஜய் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். அவர் திரிஷாவை விட்டு வெளியே வர வேண்டும்” என்றார். அதற்கு கண்டனங்கள் பல எழுந்தன. பாஜக.,வினரே கண்டனங்களைத் தெரிவித்தனர். த்ரிஷாவும் தன் பங்குக்கு அரசியலில் இல்லாத என்னை அரசியல் கருத்துக்கு இழுக்காதீர் என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், கடந்த வாரம் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்த விஷயம் அப்போது பேசுபொருளானது.
அவர் தாக்கல் செய்த மனுவில் பிரபல நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்து வந்தார். அதனை தான் 2021 ஆம் ஆண்டு தான் கண்டுபிடித்தேன். அதன் பிறகு அந்த நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை முறித்துக் கொள்வதாக எனக்கு வாக்குறுதி அளித்தார். ஆனாலும் விஜய் தொடர்ந்து அந்த நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்தார். இதனால், தான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். பலமுறை கேட்டும் விஜய் அந்த உறவில் தொடர்ந்து வந்தார். கடந்த 2021 முதல் விஜய் தன்னை உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் காயப்படுத்தினார். அதுமட்டுமின்றி 2021 இல் இருந்து என்னை தனியாக வாழுமாறு நிர்ப்பந்தித்தார். விஜயுடன் அடிக்கடி வெளிநாட்டு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை அந்த நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியது.
என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருவது எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் அவமானத்தை தருகிறது. திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார். தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கில் இரண்டாவது மனுதாரராக சேர்ப்பேன். எனக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள திருமணத்தை மீறிய உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன் என்று சங்கீதா அந்த மனுவில் குறிப்பிட்டார்.
சங்கீதா தன் மனுவில் ஒரு நடிகையுடன் விஜய்க்கு தொடர்பு என்றுதான் குறிப்பிட்டிருந்தார். அந்த நடிகை யார் என்று அவர் அப்போது சொல்லவில்லை என்றாலும், நடிகை திரிஷா மட்டுமே விஜய்யுடனான படங்களை சமூகத் தளங்களில் பகிர்ந்து வந்ததால் அது வெளிப்படையாகத் தெரிந்தது. இந்நிலையில், விஜய் ஆமாண்டா, நான் அப்படித்தான் என்று வீம்புக்கு செய்வதைப் போல், திரிஷாவுடன் நிகழ்ச்சியில் ஒன்றாகக் கலந்து கொண்டு மேலும் பரபரப்பைக் கொளுத்தியுள்ளார்.
விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் ஒரு சமூகத் தளக் கருத்து, தஞ்சை ராஜேஷ் என்பவர் பெயரில் வைரலானது. அக் கருத்து…
விஜய்க்கு ஒரு குணம் உண்டு… எதை சொல்லி மற்றவர்கள் விமர்சிக்கிறார்களோ… “ஆமாண்டா.. நான் அப்படித்தான் பண்ணுவேன்.. உன்னால் என்ன பண்ண முடியும்” என்ற முரட்டுத்தனம்…
முன்பு ஒரு முறை எச் ராஜா அவர்கள் இவரது பெயர் ஜோசப் விஜய் என்று சொன்னதும்…
கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தன்னுடைய பெயர், லெட்டர்பேட் எல்லாவற்றிலும் “விஜய்” என்று மட்டும் குறிப்பிட்டு வந்தவர்… அடுத்த நாளே “ஜோசப் விஜய்” என்று புதிய லெட்டர்பேடில் அறிக்கை வெளியிட்டார்.,..
அதே போல் இப்போது இவர் மனைவியை துன்புறுத்தி, தனிமையில் விட்டுவிட்டு திரிஷா வுடன் திருமணம் மீறிய உறவில் இருப்பதாகவும்.. இந்த புகைப்படங்கள் வெளியாகி தனக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் திருமதி சங்கீதா விவாகரத்து கோரிய செய்திகள் பொது வெளியில் பேசப்படுவதால்….
இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரிஷாவுடன் சேர்ந்து வந்து கலந்து கொண்டு… “ஆமாம்டா.. நான் இந்த நடிகை உடன் தான் இருக்கிறேன்.. உங்களால் என்னடா செய்ய முடியும்” என்ற மெசேஜை சொல்லி இருக்கிறார்…
தேர்தல் அரசியலில் இறங்கி விட்டு… பல்வேறு வயதினரின், அனைத்து பாலினத்தவரின் ஓட்டுகளையும் பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் விஜய்.. இப்படி கள்ள உறவை கெத்தாக வெளியே சொல்லி சவால் விடும் துணிச்சல் எதனால் வந்தது…
சமூக வலை தளங்களில்…
“அவருக்கு தங்கச்சியா இருப்போம் அக்காவா இருப்போம் பொண்டாட்டியா கூட இருப்போம்” என்றும்…
“குப்பை அள்ளுறவனே 4 பொண்டாட்டி வைக்கும் போது காசு வைத்திருக்கும் அவர் 10 பொண்டாட்டி வச்சிருந்தாலும் தப்பில்ல” என்றும்…
இடுப்பில் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு “என் குழந்தையை விட எனக்கு அவரைதான் பிடிக்கும்” என்றும்,
“என் புருசனை விட அவரைதான் ரொம்ப பிடிக்கும்.. ஹாஹாஹா ” என்றும்…
விஜய் என்ன செய்தாலும் அதை ஆதரிக்கும் வெறி பிடித்த அழிவு சக்தி கூட்டம் தன்னிடம் இருக்கும் துணிச்சலில் தான் அவர் இதை எல்லாம் செய்கிறார்…
அவர் ஆரம்பத்தில் இருந்தே.. தன்னுடைய ஒவ்வொரு அசைவிலும் பேச்சிலும் தனது ரசிகர்களை மட்டும் engage செய்யும் விதமாக செயல்பாடுகிறார்… ரசிகர்களை தாண்டி பொதுமக்கள் என்று ஒரு சமுதாயம் இருக்கிறது… அவர்களின் நன் மதிப்பையும் ஆதரவையும் பெற்றால் தான் அரசியலில் அங்கீகாரம் பெற முடியும் என்ற உண்மையை அவர் ஏற்கவில்லை… தமிழ்நாட்டில் உள்ள எல்லா பெண்களும் தன்னுடைய ரசிகர்கள் என்று ஆழமாக நம்புகிறார்…
ஒவ்வொரு வீட்டிலும் உள்ள இளைஞர்கள் எல்லாரும் தன்னுடைய ரசிகர்கள் என்று உறுதியாக நம்புகிறார்…
அதனால்… தான் என்ன செய்தாலும் அதை அவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பி..
திருமதி சங்கீதா மற்றும் அவர்களது மகன், மகள் ஆகியோரின் மன வலியை வேதனையை மேலும் மேலும் அதிகரிக்கும் விதமாகவும், பொது வெளியில் தன்னை விமர்சிப்பவர்களிடம் சவால் விடும் வகையிலும் இப்படி தன்னுடைய ஆணவத்தை வெளிப்படுத்துகிறார்…
தன்னுடைய மனுவில் நடிகையின் பெயரை கூட குறிப்பிடாமல் கண்ணியம் காத்துள்ளார் திருமதி சங்கீதா.. இது போல இவர் வேண்டுமென்றே அவரது வயிற்றிரிச்சலை கொட்டினால்… நாளைக்கே சங்கீதா மீடியா முன்பு வந்து நின்று தன்னுடைய மனக்குமுறலை கொட்டி அழுதால் விஜய் என்ன செய்வார்..
தேர்தல் அரசியலில் இதெல்லாம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்… ரசிகரல்லாத மற்றவர்களின் வெறுப்புக்கும் அருவருப்புக்கும் ஆளாவார்…
இது நடிகர் வடிவேலுக்கு நேர்ந்ததை போல.. தேர்தலில் தோற்ற பிறகு மீண்டும் நடிக்க வந்தால்… அப்போதும் இந்த அருவருப்பால் ஒதுக்கிய மக்களின் ஆதரவை பெற முடியாமல் சினிமாவில் இரண்டாவது இன்னிங்சும் தோல்வி அடைய வாய்ப்புள்ளது…
அகத்தால் அழிந்தான் ராவணேஸ்வரன்.. எண்ணத்தால் கெட்டான் துரியோதனன்..
ஆணவம் அறிவுக்கு சத்ரு என்பதை விஜய் இப்போது புரிந்து கொள்ள மாட்டார்.


