இந்தியன் 2 விபத்து! அவர்களை கொன்று வீட்டீர்கள்.. உலகநாயகன் பெயர் எப்படி வந்தது? பவித்ரன் சாடல்!

சென்னை, ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த இந்தியன் 2 ஷூட்டிங்கின் போது, ராட்சத கிரேன் அறுந்து விழுந்த விபத்தில், மது, சந்திரன் மற்றும் கிருஷ்ணா உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

இந்தியன் 2 ஷூட்டிங்கில் நடைபெற்ற இந்த கோர விபத்து, சினிமா ரசிகர்களை மட்டுமின்றி, பொதுமக்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.

இந்நிலையில், இந்த விபத்துக்கு, நடிகர் கமல் மற்றும் ஷங்கர் தான் முக்கிய பொறுப்பு என்றும், சினிமா துறைக்கு சம்பந்தமில்லாத, கட்டிடத் தொழிற்சாலைக்கு பயன்படுத்தப்படும் ராட்சத கிரேனை, கமல்ஹாசன் எப்படி அனுமதித்தார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஷங்கரின் குருநாதரான பவித்ரன், இதுவரை தான் கமல் பற்றியும், ஷங்கர் பற்றியும் பொதுவெளியில் பேசியது கிடையாது. ஆனால், சினிமா துறையை சேர்ந்த மூன்று அப்பாவிகள், இவர்கள் அலட்சியத்தால், ஏன் உயிர் இழக்க வேண்டும், அது தான் தன்னால் தாங்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

விஜயகாந்தின் திருமூர்த்தி படத்தில் நடந்த ஷூட்டிங்கின் போது, ஒரு காட்சியில், கீழே பாம் போட்டு, மேலே ஹெலிகாப்டர் பறக்கும் ஷாட்களை படமாக்கும் முன்னதாக, அந்த ஹெலிகாப்டரை இயக்குபவரை அழைத்து விஜயகாந்த் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்தார் என்றும், நடிகர் கமல் ஏன் அதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் இந்தியன் 2 ஷூட்டிங்கில் எடுக்கவில்லை என்று விளாசியுள்ளார்.

Source: Dhinasari News – Vellithirai News


Comments

Leave a Reply

%d bloggers like this: