[prisna-google-website-translator]

மீண்டும் மைக் மோகன்! ஹரா படத்தின் பர்ஸ்ட் லுக்!

சில்வர் ஜூப்ளி ஸ்டார் மோகன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் 80-களில் ரசிகர்களை கவர்ந்த நடிகர்களில் முக்கியமானவர் மோகன். மைக் மோகன் என்று அழைக்கப்பட்ட இவர், குறுகிய காலத்தில் ஏராளமான படங்களில் நடித்து சாதனை படைத்தவர்.

‘மூடு பனி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து கடந்த 2008-ஆம் ஆண்டு, ‘சுட்டப்பழம்’ என்கிற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

இதைத்தொடர்ந்து கடந்த 2016-ஆம் ஆண்டு தெலங்கு குணசித்திர வேடத்தில் நடித்தார். தமிழை தவிர தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையே நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படத்தில் கதாநாயகனாக மோகன் நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்கான தகவல்கள் சமீபத்தில் வெளியான நிலையில் இப்படத்தை, ‘தாதா 87’ படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்க உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ஹரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான லுக்கில் இருக்கும் மோகனின் இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தில் நடிக்க பிரபல இயக்குநர்கள் மற்றும் அறிமுக இயக்குநர்கள் என அனைவரும் தன்னை அணுகிய போதும் அதில் நான் எதிர்பார்த்த உள்ளுணர்வு இல்லை என்கிறார் மோகன்.

ஆனால் விஜய் ஸ்ரீ ஜி எனது தேவையை பூர்த்தி செய்வார் என தான் நம்புவதாக கூறுகிறார் மோகன். ஹரா திரைப்படத்தில் மோகன் ஆக்‌ஷன் நாயகனாக நடிக்கவுள்ளாராம். கதை அப்பா மகளுக்கு இடையேயான உறவு பிணைப்பை சொல்லுவதாக அமையும். குழந்தைகளுக்கு பள்ளி முதலே இந்தியச் சட்டத்தை அறிமுகப்படுத்துவது அவசியம் என்பதையும் படம் வலியுறுத்தும் என்கிறார் விஜய்.

சிவபெருமானின் திருநாமங்களில் ஒன்றான ஹரா (தீமையை அழிப்பவர்)என்ற தலைப்பை வைத்திருக்கிறார்களாம்.

மேலும் படத்தில் 80 களில் வலம் வந்த மென்மையான மோகனை ஃபிளாஷ்பேக் காட்சியில் காட்ட முயற்சி எடுத்துள்ளார்களாம் படக்குழு. படத்தில் தாடியுடன் கட்டுக்கோப்பான உடலமைப்புடன் வலம் வர இருக்கிறாராம் மோகன்.

அதற்கான உடற்பயிற்சியில் மோகன் தற்போது ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கிறார் இயக்குநர்.பிப்ரவரியில் ஹரா படப்பிடிப்பு தொடங்கவுள்ளது, முக்கியமாக கோயம்புத்தூர் மற்றும் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் படம் துவங்கவுள்ளது.

இது தவிர சென்னையில் சில பகுதிகளில் செட் அமைத்தும் படமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் தேதி வெளியான படத்தின் அறிவிப்பிற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அதற்கு நான் நன்றியுள்ளவனாக உணர்கிறேன் என நடிகர் மோகன் தெரிவிக்கிறார்.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply