வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து முதல்முறையாக நடித்துள்ளார் குக் வித் கோமாளி புகழ்.
குக் வித் கோமாளி மூலம் புகழடைந்துள்ள புகழ், அடுத்தடுத்து தமிழ் படங்களில் கமிட் ஆகியுள்ளார்
இந்நிலையில் வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்துள்ளது குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழடைந்தவர் புகழ். அந்த நிகழ்ச்சியில் இவரது சேட்டைகள் மிகவும் பிரபலம். ரசிகர்களின் ஆதரவு இவருக்கு அதிகமாக காணப்பட்டது.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்துள்ளார் புகழ். சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெயிலரிலும் இவர் ஒரு காட்சியில் தோன்றியுள்ளார்.
சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெயிலர் வெளியான சில மணிநேரங்களிலேயே மில்லியன் கணக்கில் பார்வைகளை பெற்றுள்ளது
இந்நிலையில் இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்துள்ள குறித்து புகழ் தனது இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அஜித் சார், இந்த சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்தறதுன்னே எனக்கு தெரியலை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உங்களோட பயணிக்கற இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் நன்றி என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் என்றும் அன்பும் நன்றிகளுடன் புகழ் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய சினிமா கேரியரை துவங்கிய சில மாதங்களிலேயே அஜித்துடன் இணைந்துள்ளார் புகழ். இது அவரது கேரியரில் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
அஜித், ஹுமா குரோஷி, யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ளது வலிமை.
திரையரங்குகள் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை அடுத்து ஆர்ஆர்ஆர் படம் பொங்கல் பந்தயத்தில் இருந்து பின்வாங்கியுள்ள நிலையில், வலிமை சோலோவாக களத்தில் இறங்கவுள்ளது.