சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ச்சியாக நான்கு படங்களில் நடித்த அஜித்குமாரின் ஃபார்முலா ஹெச்.வினோத்திடமும் தொடர்கிறது
அஜித்தின் நேர்கொண்ட பார்வை தொடங்கி வலிமை என நீண்ட போனி கபூர், ஹெச்.வினோத் கூட்டணி தற்போது அவரது 61வது படத்திலும் இணைந்திருக்கிறது.
ஏற்கெனவே வெளியான தகவலாக இருந்தாலும் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதன்படி முன்பு வேதாளம், விவேகம் படங்களுக்கு இசையமைத்த அனிருத்தான் அஜித் 61 படத்துக்கும் இசையமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோக, ஞாயிறு ஊரடங்கு இல்லாதபட்சத்தில் அஜித் 61 படத்தின் பூஜை ஜனவரி 16ம் தேதி நடைபெறும் என்றும் ஜனவரி மாதம் இறுதியிலோ அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்திலோ படபிடிப்பு வேலைகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலிமை ரிலீஸ் தள்ளி போன நிலையில் அஜித் 61 குறித்த தகவல் வெளியானது அவரது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கிறது.