– Advertisement –
– Advertisement –
பொங்கல் ரிலீசாக ஜனவரி 13ம் தேதி ரிலீசாகும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் வலிமை படம், கடைசி நிமிடத்தில் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.
புதிய ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
அஜித்தின் வலிமை மட்டுமல்ல, பொங்கலுக்கு ரிலீசாவதாக இருந்து கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்ட ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் போன்ற படங்களின் புதிய ரிலீஸ் தேதியும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் படங்களின் புதிய ரிலீஸ் தேதி எப்போது என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அஜித்தின் வலிமை படத்தை மார்ச் மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், சோலோவாக இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மார்ச் 4 அல்லது 11ம் தேதி வார இறுதி நாட்களிலோ அல்லது அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட் படி மார்ச் 3 அல்லது 10ம் தேதி வலிமை ரிலீஸ் செய்யப்படலாம் என ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
ஆனால் தயாரிப்பாளரான போனி கபூர் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.
வலிமை ரிலீஸ் எப்போது என தெரியாததால், அஜித்தின் அடுத்த படமான ஏகே 61 படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்க்க துவங்கி விட்டனர்.
இந்நிலையில் அஜித் திடீரென மும்பை சென்று, தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்துள்ளார். ஏகே 61 படத்தின் பூஜை மார்ச் 9ம் தேதி நடக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு, எதற்காக என ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
அதே சமயம் இது பழைய போட்டோ. விஸ்வாசம் சமயத்தில் எடுக்கப்பட்ட போட்டோ. இந்த பழைய போட்டோவை தான் போனி கபூர் தற்போது பகிர்ந்துள்ளார் என ரசிகர்கள் கூறி வந்தனர்.
போனி கபூர் பகிர்ந்த இந்த போட்டோவை தொடர்ந்து, அஜித்தின் மற்றொரு போட்டோ தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
இப்போ எங்கிருக்கிறார் அஜித்
ஆள் நடமாட்டமில்லாத இயற்கை சூழல் நிறைந்த இடத்தில் தலையில் மாட்டிய ஃபோகஸ் லைட்டுடன் இருட்டான பகுதியில், சைக்கிளுடன் நின்று கொண்டிருக்கிறார் அஜித்.
இந்த போட்டோ லேட்டஸ்ட் போட்டோவா அல்லது எப்போது எடுக்கப்பட்டது என தெரியவில்லை. இருந்தாலும் இந்த போட்டோவை அஜித் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.
இது எந்த இடம். அஜித் இப்போது எங்கு இருக்கிறார். தியேட்டரில் தான் உங்களை பார்க்க முடியவில்லை. எங்கு இருக்கிறீர்கள் என்று சொன்னால் நேரில் வந்து ஒரு போட்டோவாவது எடுத்துக் கொள்வோம். இது லேட்டஸ்ட் போட்டோவா என ரசிகர்கள் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
அஜித் சைக்கிளிங் செல்வது ஒன்றும் புதியது இல்லை என்றாலும் அஜித்தின் எந்த போட்டோ வெளியானாலும் அதை கொண்டாடுவதை ரசிகர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
– Advertisement –