[prisna-google-website-translator]

வைரமுத்து வாரிசா..? சர்ச்சையான பா ரஞ்சித் ட்விட்!

pa rantjith - Dhinasari Tamilpa rantjith - Dhinasari Tamil

அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அதன் பின்னர் தொடர்ச்சியாக பல படங்களை இயக்கி வந்தார்.

இறுதியாக கடந்தாண்டு இவர் இயக்கத்தில் வெளியானது சார்பட்டா பரம்பரை படம். அதனை தொடர்ந்து தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித்தின் பழைய டிவீட் ஒன்றை தற்போது நெட்டிசன்கள் டிரண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் அந்த டிவீட் சற்று சர்ச்சையையும் கிளப்பி வருகிறது. படிப்பதற்கு சற்று ஆபாசமாக இருப்பதால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் ரஞ்சித் இந்த டிவிட்டர் பதிவை அவரது முதல் படமான அட்டக்கத்தி வெளியான சமயத்தில் பதிவு செய்துள்ளார்.

“எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு. அட்டக்கத்தி படம் நிறைய பேருக்கு பிடிச்சிருக்கு. ரொம்ப நன்றி” என அட்டக்கத்தி படம் குறித்து ரஞ்சித் டிவிட் செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து, “என் இரு முலைக் காம்புகளை மறைக்க சிறிதளவு துணியே போதும். உன் கர்வத்தை அடக்க என் ஒரு காம்பே போதும்” என்ற ஒரு பதிவையும் அவர் செய்துள்ளார். தற்போது இந்த டிவிட்டர் பதிவை திடீரென நெட்டிசன்கள் டிரண்ட் செய்து வருகிறார்கள்.

Ranjith - Dhinasari TamilRanjith - Dhinasari Tamil

இந்த பதிவை கண்ட பலரும் ரஞ்சித்தை தாறுமாறாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இன்னும் சிலர் அவரை கேலி செய்து வருகின்றனர்.

மேலும் சிலரோ ரஞ்சித்தை கவிஞர் வைரமுத்து உடன் ஒப்பிட்டு புகழ்ந்து வருகிறார்கள். எது எப்படி இருப்பினும் ஒரு இயக்குனரின் இந்த டிவிட்டர் பதிவு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply