Connect with us

கிசுகிசு

அண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா! ரஜினிக்கு என்ன ஆச்சு?!

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலா் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு – வெற்றி, இசை – இமான்.

Published

on

annathe rajini
annathe rajini

அண்ணாத்த படப்பிடிப்புக் குழுவில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஜினி மற்றும் மற்றவர்கள் நலமாக இருப்பதாகவும், இதனால் அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படம், ரஜினியின் 168-வது படமாக வளர்ந்து வருகிறது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கிய சிவா, தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார்.

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலா் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு – வெற்றி, இசை – இமான்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கிய நிலையில், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது

இதற்காக நடிகா் ரஜினிகாந்த், தனி விமானத்தில் சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்றாா். அப்போது, ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் ரஜினி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. அண்ணாத்த படத்தில் ரஜினியின் கெட்டப் எப்படி இருக்கும் என்பதை அதன் மூலம் ரசிகர்கள் அறிந்து கொண்டு, அந்தப் புகைப்படத்தை அதிகம் பகிர்ந்து கொண்டனர். அதன் பின்னர் ரஜினி தொடர்ச்சியாக 14 மணி நேரம் படப்பிடிப்பில் பங்கேற்றதாக செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்புக் குழுவில் நான்கு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து ஹைதராபாத்தில் ராமோஜி ராவ் திரைப்பட நகரில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும் சூழ்நிலை கருதி ரஜினி சென்னைக்குத் திரும்புவார் என்று கூறப் படுகிறது. ஏற்கெனவே கட்சி வேலைகளில் கவனம் செலுத்த ரஜினி திட்டமிட்டிருந்தார். அதற்காக, சன் பிக்சர்ஸிடம் அவர் கால்ஷீட் குறித்த விவகாரங்களில் அனுமதி கேட்டிருந்தார் என்று கூறப் படுகிறது.

இதனிடையே, இது குறித்து சன்பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு டிவிட்டர் பதிவில் இதனை உறுதிப் படுத்தியிருக்கிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

three × one =

லேட்டஸ்ட்

e0ae92e0aeb0e0af81 e0ae86e0aea3e0af8d e0ae95e0af81e0aeb4e0aea8e0af8de0aea4e0af88e0ae95e0af8de0ae95e0af81 e0aea4e0aebee0aeafe0aebe e0ae92e0aeb0e0af81 e0ae86e0aea3e0af8d e0ae95e0af81e0aeb4e0aea8e0af8de0aea4e0af88e0ae95e0af8de0ae95e0af81 e0aea4e0aebee0aeafe0aebe
செய்திகள்5 மணி நேரங்கள் ago

ஒரு ஆண் குழந்தைக்கு தாயான எமி ஜாக்சன் காதலனைப் பிரிகிறாரா?

நடிகை எமி ஜாக்சன் தனது காதலரை பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழில், மதராச பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் இங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன். இந்தப் படத்தை...

e0aeaae0aebfe0aeb0e0aeaae0aeb2 e0aea8e0ae9fe0aebfe0ae95e0aeb0e0af8d e0aeb5e0af87e0aea3e0af81 e0ae85e0aeb0e0aeb5e0aebfe0aea8e0af8d e0aeaae0aebfe0aeb0e0aeaae0aeb2 e0aea8e0ae9fe0aebfe0ae95e0aeb0e0af8d e0aeb5e0af87e0aea3e0af81 e0ae85e0aeb0e0aeb5e0aebfe0aea8e0af8d
செய்திகள்8 மணி நேரங்கள் ago

பிரபல நடிகர் வேணு அரவிந்த் மருத்துவமனையில் அனுமதி!

பிரபல சின்னத்திரை நடிகரும் கலைமாமணி விருது பெற்றவருமான வேணு அரவிந்த் அப்பலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் பாலச்சந்தரின்...

e0aea8e0ae9fe0aebfe0ae95e0aeb0e0af8d e0ae95e0aebee0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0aebfe0ae95e0af8d e0aeaee0af80e0aea3e0af8de0ae9fe0af81 e0aea8e0ae9fe0aebfe0ae95e0aeb0e0af8d e0ae95e0aebee0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0aebfe0ae95e0af8d e0aeaee0af80e0aea3e0af8de0ae9fe0af81
செய்திகள்10 மணி நேரங்கள் ago

நடிகர் கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

நவரச நாயகன் நடிகர் கார்த்திக் உடற்பயிற்சி செய்தபோது தவறி கீழே விழுந்ததில் காலில் அடிப்பட்டுள்ளது. வீட்டில் உடற்பயிற்சி செய்தபோது தவறுதலாக கீழே விழுந்ததில் கார்த்திக்கிற்கு காலில் அடிபட்டு...

e0ae95e0aeb1e0af8de0aeaae0aeaee0aebee0aeaee0af8d e0aeaee0aeb0e0af81e0aea4e0aebee0aea3e0aebfe0aeaf e0aeb5e0aeafe0aebfe0aeb1e0af8d e0ae95e0aeb1e0af8de0aeaae0aeaee0aebee0aeaee0af8d e0aeaee0aeb0e0af81e0aea4e0aebee0aea3e0aebfe0aeaf e0aeb5e0aeafe0aebfe0aeb1e0af8d
செய்திகள்1 நாள் ago

கற்பமாம்.. மருதாணிய வயிற்றில் போட்டு ஃபோட்டோ போட்ட சின்னத்திரை நடிகை!

பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ஃபரீனா வயிற்றில் மருதாணியுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் இன்ஸ்டாகிராமில் கவனம் ஈர்த்து வருகிறது. தொகுப்பாளினியாக இருந்து சீரியல் நடிகையானவர் ஃபரீனா ஆசாத். இவர்...

e0aeb7e0aebfe0aeb2e0af8de0aeaae0aebe e0aeb7e0af86e0ae9fe0af8de0ae9fe0aebf e0ae95e0aea3e0aeb5e0aeb0e0af8d e0aeb0e0ae95e0ae9ae0aebf e0aeb7e0aebfe0aeb2e0af8de0aeaae0aebe e0aeb7e0af86e0ae9fe0af8de0ae9fe0aebf e0ae95e0aea3e0aeb5e0aeb0e0af8d e0aeb0e0ae95e0ae9ae0aebf
செய்திகள்2 நாட்கள் ago

ஷில்பா ஷெட்டி கணவர்: ரகசிய அறை.. ஆபாசபட செயலிகள்.. விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்!

shipa பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச வீடியோக்கள் தயாரித்து அதனை மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்து பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்....

Advertisement