படப்பிடிப்பிக்கள் நிறுத்தம்: ஆர் கே செல்வமணி!

கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 114 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில்,சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து, திரையரங்க உரிமையாளர்கள் திரையரங்குகளை மூடும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சின்னத்திரை படப்பிடிப்புகள் 19 ஆம் தேதிமுதல் நிறுத்தப்படும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்படும். சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மறு அறிவிப்புகள் வெளிவரும் வரை படப்பிடிப்புகள் தமிழகத்தில் ஒத்திவைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


Comments

Leave a Reply

%d bloggers like this: