நீ இல்லைனா என்ன இன்னொருவர்! த்ரிஷா போனத கூலா டீல் செய்த படக்குழு! கொரட்டால சிவா டைரக்சனில் உருவாகி வரும் இந்தப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

தனது கனவுப்படமான சைரா நரசிம்ம ரெட்டி படத்தை முடித்துவிட்டு ரசிகர்களுக்காக தற்போது ஆச்சார்யா என்கிற கமர்ஷியல் படமொன்றில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி.. 

கொரட்டால சிவா டைரக்சனில் உருவாகி வரும் இந்தப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ள இருந்த  நிலையில் திடீரென இந்தப்படத்திலிருந்து விலகியுள்ளார் த்ரிஷா. 

கதையில் ஏற்கனவே சொன்ன தனது கதாபாத்திரத்தில் நிறைய மாற்றங்களை செய்ததால் தான் இதிலிருந்து விலகுவதாக 
அறிவித்துள்ளார் த்ரிஷா..இது த்ரிஷா ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் ஆச்சார்யா படக்குழு இதை ரொம்பவே கூலாக டீல் 
பண்ணி வருகிறது. 

த்ரிஷாவுக்கு பதிலாக காஜல் அகர்வாலை இந்தப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். ஏற்கனவே 
சிரஞ்சீவியின் 150வது படமான கைதியில் காஜல் தான் கதாநாயகியாக நடித்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Trending