[prisna-google-website-translator]

ராஷ்மி கோபிநாத்தை டென்ஷன் செய்த நடிகர்!

யாராவது வம்புக்கு இழுத்தால் அதகளம் செய்துவிடுவேன்

யோகி பாபு நடிக்கும் காக்டெய்ல் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார், கன்னட நடிகை ராஷ்மி கோபிநாத். அவர் கூறியதாவது: எம்பிஏ படித்துள்ள நான், மாடலிங்கில் ஈடுபட்டு, 2016ல் பெங்களூரு சிறந்த மாடலாக தேர்வானேன். யோகி பாபுவை டிவியிலும், தியேட்டரிலும் பார்த்திருக்கிறேன். முதல்நாள் அவருடன் இணைந்து நடித்தபோது டென்ஷனாகி விட்டேன்.

இதில் எனக்கு கிராமத்து பெண் வேடம். யாராவது வம்புக்கு இழுத்தால் அதகளம் செய்துவிடுவேன். ஒருமுறை நீளமான வசனம் பேசி யோகி பாபுவை திட்ட வேண்டிய காட்சியில் நடித்தபோது, திடீரென்று அவர் கமென்ட் அடித்ததால், நடிப்பதை நிறுத்தி சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். கன்னடத்தில் பாத்ரா, தெலுங்கில் டப்பே டப்பு, தமிழில் காக்டெய்ல், சி.வி.குமார் தயாரிக்கும் வைரஸ் ஆகிய படங்களில் நடிக்கிறேன்.

Leave a Reply