சனம் ஷெட்டி வெளியேற்றம்… விஜய் டிவியை இப்படி துப்பிட்டாரே கஸ்தூரி?…

kasthuri

பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஏனெனில், பிக்பாஸ் விளையாட்டை மிகவும் நேர்மையாக அவர் விளையாடி வந்தார். அர்ச்சனா, பாலா என சிலர் குரூப்பாக செயல்பட்டு வந்தாலும் சனம் ஷெட்டி யாருடனும் சேராமல் தனித்து விளையாடி வந்தார். மற்ற போட்டியாளர்களிடம் தனக்கு தவறென்று பட்டதை உடனடியாக தெரிவிக்க அவர் தயங்கவில்லை.

அனிதா வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சனம் ஷெட்டி வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதையடுத்து டிவிட்டரில் பலரும் விஜய் டிவிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நியாயமான நேர்மையான முறையில் மக்கள் வாக்குகளை மட்டுமே நம்பி விளையாடப்படும் ஒரு Game என்று இன்னும் நம்புபவர்கள் மேடைக்கு வரவும்.
மிக்ஸ்ச்சர் பார்ட்டிகளையும் கம்பெனி ஆர்டிஸ்ட்ங்களையும் பாதுகாத்து மத்தவங்களுக்கு கல்தா குடுக்கறதுக்கு பேரு என்ன தெரியுமா ?’ என பதிவிட்டுள்ளார்.

%d bloggers like this: