அவங்க பேர போஸ்டர்ல போடக்கூடாது – ரஜினி வெளியிட்ட அறிக்கை

rajini

நடிகர் ரஜினிகாந்த் வருகிற ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். டிசம்பர் 31ம் தேதி தனது கட்சி அறிவிப்பை அறிவிக்கவுள்ளார். மேலும், தனது கட்சியில் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன் மூர்த்தியையும் நியமித்துள்ளார். எனவே, ரஜினியின் அரசியல் பணி சூடுபிடித்துள்ளது.

rajini

இந்நிலையில், ரஜினியிடமிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒட்டப்படும் போஸ்டர்களில் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன், மாநில நிர்வாகி சுதாகர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஜினி புகைப்படத்துடன் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளின் புகைப்படங்கள் மட்டுமே போஸ்டர்களில் இடம்பெற வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இன்று தனது மன்ற நிர்வாகிகளை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து ஆலோசனையும் செய்துள்ளார்.

%d bloggers like this: