கர்ணன் படப்பிடிப்பு – முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தனுஷ்

karnan

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ. இயக்குனர் பா.ரஞ்சித்தின் உதவியாளரான ஐவர் நடிகர் தனுஷை வைத்து ‘கர்ணன்’ என்கிற படத்தை இயக்கி வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கிற்கு முன்பே துவங்கப்பட்டது. அதன்பின் பல தடைகள் என சந்தித்து போன மாதம் படப்பிடிப்பு துவங்கியது.

இந்நிலையில், தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த தகவலை தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த பட வாய்ப்பை எனக்கு அளித்த மாரிசெல்வராஜுக்கு நன்றி. ஆதரவு கொடுத்த தானு சாருக்கும் நன்றி. என்னுடன் நடித்தவர்கள் மற்றும் சிறப்பான இசையை கொடுத்த சந்தோஷ் நாராயணனுக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார்.